வார ராசி பலன்: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு ஏற்படும் மாற்றம்.. அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: பங்குனி மாதம் ஆரம்பிக்கிறது. மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பங்குனி மாதம் நடைபெறவுள்ளது. அந்த வகையில், பங்குனி மாதத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார்.

Weekly rasi palan Astrology lucky zodiac signs

மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு அதிகமான யோகம் கிடைக்கும். நல்ல அனுகூலங்கள் கிடைக்கும். வழக்குகளில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு உண்டு. புதிய முயற்சி, வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வீடுகளை புனரமைப்பீர்கள். அறை கட்டுவீர்கள். ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு மாறும் வாய்ப்புண்டு. பூர்வீக சொத்துகளை வாங்குவீர்கள். பூர்வீகத்தில் வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

சுப காரியத் தடைகள் நிவர்த்தியாகும். நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நல்ல மருத்துவர்கள், ஆலோசனைகள் கிடைக்கும். நல்ல ஏற்றம் உண்டாகும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து முடிப்பீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

உபத்திரவமாக இருந்த விஷயங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். அடுத்தடுத்த நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முதலீடுகளுக்கான பணம் வரும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். படிப்பு, உத்தியோகம், தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வண்டி, வாகன மாற்றங்கள் கைகொடுக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகொடுப்பது, ஆச்சரியம், முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த நிலை நீங்கும். யோக பலன்களை அதிகம் பெறக்கூடிய ராசியினராக இருப்பீர்கள். சோம்பல் இல்லாமல், சுறுசுறுப்புடன் இருப்பது நல்லது.

நரசிம்மர் காயத்ரியை வாழ்நாள் முழுவதும் வாசிப்பது நல்லது. மேலதிகாரிகள் முழு பொறுப்புகளை உங்களிடம் கொடுப்பார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் வசந்தங்கள் ஏற்படும். பிள்ளைகளிடம் இருந்த மன அழுத்தங்கள் தீரும். நண்பர்கள் விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். எல்லா விஷயத்திலும் உங்களுக்கு நேர்மறையாக இருக்கும்.

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்கள் பிள்ளைகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுப காரிய தடைகளில் இருந்து வந்த தடை நீங்கும். அசையும் அசையா சொத்துகள் சேர்க்கை ஆனந்தத்தை பெற்றுத் தரும். சம்பள உயர்வு கிடைக்கும். தைரியம், லாபம் உண்டாகும். தொழில் ரீதியாக அனுகூலம் உண்டாகும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் பெறுவீர்கள். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு தேக ஆரோக்கியத்தை பார்த்து கொள்வது நல்லது.

பிள்ளைகள் வண்டி, வாகனத்தில் போகும்போது கவனமாக இருக்கச் சொல்வது நல்லது. எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது. அபிராமி அந்தாதி 40, 59, 75 இந்த மூன்று பாடல்களை மனப்பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும். தொழில், வியாபாரம், பண வரவு விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம். தெய்வ மார்க்க பயணங்கள், யாத்திரைகள், கோயில் திருப்பணிகள் உற்சாகத்தை தரும். தனிப்பட்ட முறையில் யோகமும், அனுகூலமும் பெறும் ராசியினர் நீங்கள்தான்.

எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். ஒன்றன்பின் ஒன்றாக ஏற்றங்கள் உண்டாகும். உறவுகளிடம் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. இல்லையெனில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக எந்த மாற்றங்களையும் எடுக்கலாம். மனைவி, கணவன் மனம்விட்டு பேசுவது நல்லது. பிரச்சனை இருந்தால் வெள்ளை கொடி காட்டிக் கொள்வது சந்தோஷமான அமைப்பை ஏற்படுத்தி தரும். நிலம், வீடு, தங்கம் வாங்கும் அமைப்பு, ஆபரணம் வாங்குவது, தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.

தனுசு ராசி: ரத்த பந்த உறவுகளுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு விஷயங்களில் பதட்டமில்லாமல் இருந்தால் எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். உத்தியோகத்தில் அதிஅற்புதமும், ஏற்றமும் பெறுவீர்கள். நீண்டநாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும் காலமாக இருக்கும். தொழில் அபிவிருத்தி, உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அபிவிருத்தி ஏற்படும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேற்று மொழி பேசுபவர்களால் அதிக ஆதாயம் பெறக்கூடிய ராசிக்காரர்களின் தனுசு ராசியினரும் ஒருவர். லாபம், நலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றங்கள் ஏற்படும். உங்களிடம் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நல்ல நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப்பு நன்மையையும், சந்தோஷத்தையும் தரும்.

மனதில் இருந்த பாரங்கள் படிப்படியாக குறையும். எடுத்த காரியங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் சந்தோஷம், ஏற்றம் உண்டாகும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளியிடத்திலும் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+