சிம்மம், கன்னி ராசிகளுக்கு சிக்கலோ சிக்கல்!.. இந்த 2 விஷயம் வேண்டவே.. வேண்டாம்!
வார ராசி பலன்: பங்குனி மாதத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
வார ராசி பலன்
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். அதன்படி கடந்த மார்ச் 29 ஆம் தேதி ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த வாரத்துக்கு பிறகு தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த வாரத்துடன் தமிழ் மாதமான பங்குனி மாதம் நிறைவடைந்து சித்திரை மாதம் பிறக்கவுள்ளது. இது அனைவருக்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கும். இந்நிலையில் 07.04.2025 - 13.04.2025 சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகவும், தெளிவாகவும் பார்க்கலாம்.
சிம்மம் - உத்யோகம் மற்றும் தொழிலில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அஷ்டம சனியை நினைத்து பெரிதாக கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு சனி நல்லது தான் செய்வார். ஆனால் தற்போது கிரகங்களின் அமைப்பு உங்களுக்கு சாதகமாக இல்லை. அதனால் சிம்ம ராசி பங்குனி மற்றும் சித்திரை ஆகிய இரண்டு மாதங்களுமே கவனமாக இருக்க வேண்டும்.
தடைகள்
மே 14 ஆம் தேதிக்கு பிறகு உங்களுக்கு அருமையான பலன்கள் கிடைக்கும். தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்க குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிலும் நல்ல செய்தி கிடைக்கும்.
பயணம்
இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத தருணங்களில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று ஒரு பூஜை செய்துவிட்டு செல்வது நல்லது. ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். நரம்பு, பாதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் கவனம் தேவை. நல்ல ஓய்வு தேவை. இந்த வாரத்தில் உங்களுக்கு விநாயகர் வழிபாடு மன ஆறுதலை கொடுக்கும்.
கன்னி - எதிலும் பொறுமையாக இருக்க வேண்டிய வாரம். உத்யோகம் மற்றும் தொழிலில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது. முதலீடு சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கை துணையுடன் அடிக்கடி பிரச்னைகள் வந்து செல்லும். எனவே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
வாழ்க்கை துணை
குடும்பத்தில் அந்நியர்கள் தலையீட்டை தவிர்க்க வேண்டும். பிறர் குடும்ப சமாச்சாரங்களில் நீங்கள் தலையிடக் கூடாது. வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வாகன பயணத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக இருந்தால் தேங்காய் உடைத்து பூஜை செய்துவிட்டு செல்வது நல்லது.
நிதானம்
குழப்பங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வாமை, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கல்வியிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எதிலும் நிதானமாக செயல்பட்டாலே வெற்றிகள் வசமாகும். பெருமாள் வழிபாடு உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications