செல்வத்தை குவிக்கும் மேஷம், ரிஷபம், மிதுனம்?.. வாழ்க்கையில் ஏற்படப் போகும் சூப்பர் மாற்றம்
Weekly rasi palan: 2025 பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை மாசி மாதம் 12 ஆம் நாள் முதல் மாசி 18 வரை மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்காரர்களுக்கு என்ன விதமான நற்பலன்கள் கிடைக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வாரத்தில் மிக முக்கிய தினமான மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. சிவபெருமானுக்குரிய தினமான மகா சிவாரத்திரி தினத்தன்று ஒரு கால பூஜையிலாவது அமர்ந்து மனதார வழிபடுவதால் ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கும். பழங்கள், மலர்கள், வில்வ இலை, தாமரை என தங்களால் முடிந்தவற்றை சிவனுக்கு சாற்றி வழிபடுவது அற்புதமான பலன்களைத் தரும்.
மேஷம்: இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். பூமி சார்ந்த விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். வீடு வாங்குவது, விற்பது, பத்திரப் பதிவு செய்வது போன்றவை கைகூடி வரும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும். வேலையில் மேலதிகாரிகளின் விஷயங்களில் நல்ல கெளரவம் ஏற்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் அற்புதமான ஏற்றம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் படிப்படியாகக் குறையும். நிறைய கூட்டாளிகள் கிடைப்பார்கள். பண வரவு உண்டாகும். பணத்தை சேமிப்பதற்கான விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.
அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டு ஓர் ஒழுங்காக கொண்டு செல்வீர்கள். ஏழரை சனி வர வர உங்களுடைய யுக்திகளை நீங்களே மாற்றுவீர்கள். துணைவியின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளுடன் பாராமுகமாக இருந்தவர்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள். நிறைய நண்பர்களை சந்திப்பீர்கள். பதட்டம், பயம் படிப்படியாகக் குறையும். இறைவன் பார்த்துக் கொள்வான் என்று நம்புவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் உங்களை விட்டு விலகுவார்கள். வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. துர்கை, முருகர் வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு வயிறு, கழிவு, முதுகு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தொழில், உத்தியோகம், படிப்பு, வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள், பெற்றோர், குடும்பத்தில் சந்தோஷம் ஏற்றம் உண்டாகும். எதிரிகளால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அதனை தவிர்த்துவிட்டு கடந்து செல்வது நல்லது. படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர் பிரபலமடைவீர்கள். யோக காலமாக இருக்கும். தொழில்நுட்ப அனுகூலங்கள் ஏற்றத்தை தரும்.
பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு கடன் அமைப்புகள் கிடைக்கும். முதலீடுகள் வந்து சேரும். பதட்டம் போய் பட்டாம்பூச்சி பறக்கும் காலமாக இருக்கும். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தனிப்பட்ட செல்வாக்கு உண்டாகும். ஏற்றம் பெறுவீர்கள். வியாபாரத்தில் காணப்பட்ட சிக்கல்கள் தீரும். யோகமும், அனுகூலமும் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

வேலையில் தொய்வாக இருந்தவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக நல்லது நடக்கும். பெருமாள் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். அனுகூலமான அமைப்பு உண்டாகும். பெரியோர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன்களை தீர்ப்பது, வழக்கில் சாதகமான முடிவு போன்றவை சுமூகமாக முடியும். அனுகூல அமைப்பு உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு, உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். சனிக்கிழமை பசு மாட்டுக்கு அகத்துக்கீரை கொடுப்பது நல்ல பலன்களைத் தரும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications