கடகம், சிம்மம், கன்னி பண வரவு அதிகரிக்கும்.. அதிர்ஷ்டம் தரும் வார ராசி பலன்
Weekly rasi palan: 2025 பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை மாசி மாதம் 12 ஆம் நாள் முதல் மாசி 18 வரை கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன விதமான நற்பலன்கள் கிடைக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வாரத்தில் மிக முக்கிய தினமான மகா சிவாரத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. சிவபெருமானுக்குரிய தினமான மகா சிவராத்திரி தினத்தன்று ஒரு கால பூஜையிலாவது அமர்ந்து மனதார வழிபடுவதால் ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கும். பழங்கள், மலர்கள், வில்வ இலை, தாமரை என தங்களால் முடிந்தவற்றை சிவனுக்கு சாற்றி வழிபடுவது அற்புதமான பலன்களைத் தரும்.

கடகம்: கடக ராசிக்கு உங்கள் குழந்தைகளின் சுப காரிய தடைகள் நீங்கும். கல்வி, வேலை வாய்ப்பில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையுடன் ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. பயணத்தில் கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம்.
வார்த்தைகளில் கவனமாக செயல்பட்டால் ஆச்சர்யமான முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால பிரச்னைகள் விலகும். உத்யோகத்தில் மேல் அதிகாரியுடன் கவனம் தேவை. அரசுத்துறை, அரசியல் வாதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் படபடப்பு இருந்து கொண்டே இருக்கும். நரம்பு, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கால் பகுதியில் அடிபடுவது போன்ற ஆபத்து உள்ளது. சிவன் கோயிலில் அபிஷேகம் செய்ய உதவுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்கு தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தாய், தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் கல்வி, உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். உத்யோகத்தில் பணிச்சுமை குறைந்து நிம்மதி பிறக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும்.
பழைய பாக்கி வசூலாகும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. வாழ்க்கை துணை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கால் மற்றும் கழுத்து பகுதியில் சின்ன சின்ன பிரச்னைகள் வந்து செல்லும். அரசு, அரசியல்வாதிகள், கலை, ஊடகத்துறையினருக்கு ஏற்றம் உண்டு.
கன்னி: கன்னி ராசிக்கு நல்ல ஏற்றம் உண்டு. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். அரசு, அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும். கௌரவத்தை இழப்பது போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.
கை, கால் வலி, தோல் ஒவ்வாமை, சுவாச பிரச்னைகள் ஏற்படும். தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். உத்யோகத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குரு பெயர்ச்சி நிகழவுள்ளதால் உத்யோகம், தொழில், கல்வி ஆகியவற்றில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதால் நன்மை பிறக்கும்.
-
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. 30 நாட்களில் வரும் குட்நியூஸ் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன்












Click it and Unblock the Notifications