"துப்பாக்கிய பிடிங்க சார்".. துலாம், விருச்சிகம் ராசிகள் வாழ்க்கையை மொத்தமாக மாற்றும் அமைப்பு
ராசி பலன்: பங்குனி மாதத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டு வார ராசி பலன்
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். கடந்த மார்ச் முதல் வருகிற மே மாதம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது. தமிழ் புத்தாண்டும் பிறந்துவிட்டது. விரைவில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சியும் நிகழ உள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
16.04.2025 - 30.04.2025
பங்குனி மாதம் நிறைவடைந்து சித்திரை மாதம் பிறந்துள்ளது. புதிய நம்பிக்கையுடன் பிறந்துள்ள விசுவாவசு தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்16.04.2025 - 30.04.2025 துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகவும், தெளிவாகவும் பார்க்கலாம்.
துலாம் - இந்த இரண்டு வாரங்களில் அதிகளவு நற்பலன்களை பெறப் போகிறீர்கள். வாழ்க்கை துணையுடன் மேற்கொள்ளும் பயணம் நன்மைகளை உண்டாக்கும். சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல பலன்களை பெறுவீர்கள். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். வீடு, நிலம், வாகனம், ஆபரணங்கள் உள்ளிட்ட சொத்துகள் சேரும்.
அதிர்ஷ்டம்
வாகனத்தில் ஏற்படும் மாற்றத்தால் அதிகளவு நன்மை ஏற்படும். குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குழந்தைகளால் பெருமை கொள்ளும் காலமாக இருக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் மகிழ்ச்சியை கொடுக்கும். மனதில் நம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
சுப விரயம்
சுப விரயம் இருக்கும். புதிய தொழில், தொழிலில் புதிய முயற்சி மேற்கொள்வதற்கு இது சிறப்பான காலம். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றிகள் குவியும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்பத்தில் உங்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.வாழ்க்கை துணையுடன் அவ்வபோது பிரச்னை ஏற்படும். வாழ்க்கை துணையுடன் வீண் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
கவனம்
முதுகு தண்டுவடம் மற்றும் ஒவ்வாமை சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோயில் சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.
விருச்சிகம் - இந்த காலத்தில் அதிகளவு வெற்றிகளை வாரி குவிக்க போகிறீர்கள். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகளவு உயரும். அரசு மற்றும் அரசியல்வாதிகள், கலைஞர்களுக்கு சிறப்பான ஏற்றம் உண்டு. சமூகத்தில் கௌரவம், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சிலருக்கு விருதுகள் கிடைத்து புகழ், அங்கீகாரம் கிடைக்கும். இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றி உறுதி.
வெற்றி
திட்டமிட்டு செய்யும் காரியங்களில் பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும். மன சங்கடங்கள் நீங்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உத்யோகம் மற்றும் தொழிலில் புதிய பொறுப்புகள் நிச்சயம் தேடி வரும். அரசு பணிகளுக்கு முயற்சி செய்வோருக்கு இந்த காலத்தில் நல்ல தகவல் கிடைக்கும். தொலைதூர பயணங்களால் நன்மை உண்டாகும்.
கவனம்
புதன் கிரகத்தால் அவ்வபோது மன அழுத்தம் வருவதை தவிர்க்க முடியாது. வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சூரியன் ஆறாம் இடத்தில் இருப்பதால் முதுகு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அதிக கவனம் தேவை. உங்கள் வீட்டின் அருகே உள்ள பார்வதி தேவி வழிபாடு நன்மைகளை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications