தனுசு ராசிக்கு கொட்டிக் கொடுக்கும் பணம்.. மகரத்துக்கு வண்டியில தான் பிரச்சனையே.. ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 21 முதல் 27 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-dhanusu-magaram-sagittarius-capricorn-people-will-get-i

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். குடும்பத்தை விட்டு தொலைதூர பயணம் செய்யும் வாய்ப்பு ஏற்படும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உணவில் மட்டும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உறவுக்காரர்களுடன் தேவையில்லாத மனத் தாங்கல்கள் வேண்டாம். கவனமாக இருப்பது நல்லது.

கோபத்தை தவிர்ப்பது நல்லது

தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சிறிய கோபதாபம் படுவது கூட பெரியளவில் மனக்கஷ்டத்தை தரும். பிள்ளைகள் விஷயத்தில் பூதக் கண்ணாடி ஆராய்ச்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆவது பாடல்களைப் படிப்பது, கேட்பது நல்லது. கண்டிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். அதனால் கோபம் ஏற்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பண வரவு கொட்டும்

அசையும், அசையா பொருள்கள், பண வரவு, முதலீடுகள், சொத்துகள் சேர்க்கும் யோகம் உண்டாகும். அனுகூலத்தை தரும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். வாகன அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். பெரிய சந்தோஷம் அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். பெரிய நிம்மதி, நம்பிக்கை உண்டாகும். தொடர்ச்சியாக இருந்து வந்த சிக்கல்கள் கஷ்டங்கள் தீரும்.

அந்நியர் தலையீடு

குடும்பத்தில் பிறர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. அதேபோல, தொழில் விஷயத்தில் யாருடைய ஆலோசனையையும், அறிவுரையையும் கேட்காமல் இருப்பது நல்லது. மற்றபடி தனுசுக்கு நல்ல லாபம், முன்னேற்றம், வளர்ச்சி உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் நவக்கிரகத்தில் சூரியனை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். கோதுமை அல்வா, கோதுமை இனிப்பு, கோதுமை பிஸ்கட் போன்ற கோதுமை தொடர்பான பொருள்களை தானமாகக் கொடுப்பது நல்லது. ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த தானத்தை செய்வது நன்மை பயக்கும். நரம்பு தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம், தலைவலி, கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

தான் உண்டு தன் வேலை உண்டு

சட்டத்திற்குப் புறம்பான விஷயங்கள், அது சம்பந்தப்பட்டவர்களின் நிழல் கூட படாமல் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக எந்த ஒரு முடிவாக இருந்தாலும் பொறுமையாக இருப்பது நல்லது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உணர்ச்சிவசப்பட்டு பேசுபவர்கள் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும். தொழில் விஷயத்தில் நிதானம் நிதானம் என இருப்பது நன்மை பயக்கும்.

வாகனத்தில் கவனம்

வாகனத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஓட்டுநர் வேகமாக இருந்தால் கூட நீங்கள் உஷாராக இருப்பது நல்லது. நடக்கும்போது, சாலையைக் கடக்கும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செல்போனால் தொந்தரவு ஏற்படும். பயணங்களின்போது செல்போனை தவிர்ப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+