கடக ராசிக்கு தலைக்குமேல் சுத்தும் கத்தி.. கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. பேச்சில் தான் கண்டமே
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை அதாவது ஆனி 2 இல் இருந்து 8 வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக வியாழக்கிழமையில் தெய்வ வழிபாடு செய்வது நிம்மதியைக் கொடுக்கும், மன அழுத்தங்கள் தீரும். குடும்பத்தில் நல்ல அனுகூலத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும். தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியாக இருந்த சிக்கல்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். பயணம் தொடர்பான சமயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
பெற்றோர் பெரியோர் தேக ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய புதிய தொழில் மாற்றங்களுக்கான உங்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினருக்கு மிகப்பெரிய நன்மையும், சந்தோஷமும் ஏற்படும். ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
தடைகள் நீங்கும்
இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்க கோளார் பதிகத்தை சொல்லி வருவது ஏற்றமான அமைப்பை உண்டாக்கும். மன அழுத்தம் படிப்படியாக மாறுவது சுபிக்ஷத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். புதன்கிழமை மதியம் வேளைகளில் எலுமிச்சை சாறு அல்லது சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது உங்களுக்கு விரையங்களாவதை குறைக்கும்.
விரையம்
விரையங்கள் அதிகமாக இருப்பதால் விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போதும், புதிய மனிதர்களிடத்தில் முதலீடுகள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடிகளில் மாட்டிக் கொள்ளும் காலம் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தான் உண்டு, தன் வீடு உண்டு என்று சுருக்கிக் கொள்வது நல்லது. இரவு நேரங்களில் குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களுடன் செல்வதை தவிர்ப்பது நல்லது.
கவனம்
நண்பர்களுக்காக வீண் வம்புகளுக்குச் சென்று வார்த்தைகளை விடுவது, வாக்குவாதம் செய்வது சட்ட சிக்கலை உண்டாக்குவதற்கான வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்த்தால் நன்மையான அமைப்பும், சந்தோஷமான அமைப்பும் ஏற்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் படிப்படியாக உண்டாவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications