ஆடி போய் ஆவணி வந்தா கடகத்துக்கு டாப் கிளாஸ் யோகம்.. பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. பேச்சில் கவனம்
வார ராசி பலன்: ஆனி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான அதாவது ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடக ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய வாரமாக இந்த வாரம் இருக்கும். தெய்வ வழிபாடுகளைத் தவறாமல் கடைப்பிடிப்பது நல்லது. சிவன் வழிபாடு நல்ல நன்மைகளையும், மன நிம்மதியையும் ஏற்படுத்தும். விலையுயர்ந்த பொருள்களான நகைகள், ஆவணங்கள், பெரும் பணம் போன்றவற்றை கையாளும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இல்லையெனில் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
வார்த்தையில் கவனம்
நியாபக மறதியால் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும் காலகட்டமாக இருக்கும்.
கடன்கள் தீரும்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளில் நல்ல மேன்மை உண்டாகும். பழைய கடன்களை கட்டி முடிக்கும் காலகட்டமாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த தடைகள், பாதிப்புகள் நீங்கும். மன அழுத்தங்கள் படிப்படியாக தீரும். குருவின் பார்வை அஷ்டமத்தில் இருப்பதால் மன பாரங்கள், அழுத்தங்கள் பரிபூரணமாக நீங்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.
ஆவணி மாதம் டாப்
எதிரிகள் பெரும் பலத்தைப் பெற்றிருந்தாலும் ஒரே நாளில் எடுத்த காரியங்களில் ஜெயிக்கும் தன்னம்பிக்கையைப் பெறுவீர்கள். ஆவணி மாதம் முடியும் காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு படிப்படியாக நன்மைகள் ஏற்படத் தொடங்கும். ஆவேசப்படுவது, ஒருமையில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்களைப் போலவே மற்றவர்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்
சில இடங்களில் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் தர்க்கம் செய்யாமல் பொறுமையாக, நிதானத்துடன் செல்வது நல்லது. ஒவ்வாமை, ஜாயின்ட் பெயின் போன்றவை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications