கன்னி ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. எதிர்பார்க்காத மாற்றங்களால் இனி ஒரே குஷிதான்
வார ராசி பலன்: ஆனி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான அதாவது ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம், அனுகூலமான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். நவக்கிரகத்தில் இருக்கும் குருவின் வழிபாடு அனைத்துவிதமான நற்பலன்களையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். குருவுக்கு தீபமேற்றி வழிபாடு செய்து வருவது குடும்பத்தில் காணப்பட்டிருந்த சிக்கலைத் தீர்க்கும்.
மாற்றம் முன்னேற்றம்
உங்கள் குடும்ப விஷயங்களில் பிறர் தலையிடுவதையும், பிறர் குடும்ப விஷயங்களில் உங்களுடைய தலையீட்டையும் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியின் உடல்நிலையையும், மனைவி கணவனின் உடல்நிலையையும் பார்த்துக் கொள்வது நல்லது. அனைத்து விதமான மாற்றங்களும் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழில், படிப்பு, உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் வரும் மாற்றங்களை எடுத்துக் கொள்வது அனுகூலத்தை ஏற்படுத்தும்.
வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது
முதலாளித்துவத்தில் இருந்த பாதிப்புகளை சரிசெய்து, மற்ற முதலாளிகளைப் போல எல்லோரிடமும் பழகக்கூடியவராக மாறுவது நன்மையைத் தரும். மேலதிகாரிகள் சொல்வதை கேட்பது பெரும் வெற்றியைப் பெற்றுத் தரும். உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வீண் வாதங்கள் செய்வதால் உத்தியோகத்தில் தேவையில்லாத பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
அனுகூலம்
10 ஆம் இடத்தில் இருக்கும் குருவுடன் சூரியன் இணைந்திருப்பதால் தைரியமாக நிறைய காரியங்களை எடுத்துச் செய்வீர்கள். பதவி உயர்வு, உத்தியோகம், வியாபாரம், தொழில்களில் இருந்த தடைகளை எல்லாம் மீறி அனுகூலத்தை ஏற்படுத்திக் கொடுப்பார். பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும் யோகம் உண்டாகும். ஏற்றமும், அனுகூலமும் ஒன்றாக வரும் காலகட்டமாக இருக்கும்.
கவனம்
குடும்பத்தில் இருக்கும் கோவத்தை வெளியில் காட்டக் கூடாது. பிள்ளைகள் விஷயத்தில் மிகுந்த ஆராய்ச்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆண், பெண் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் ஒவ்வாமை, அலர்ஜி தொடர்பான விஷயங்கள், கண் பிரச்சனை விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
சுப விரையும்
சுப விரையங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மதிய வேளைகளில் சாப்பாடு மற்றும் எலுமிச்சை ஊறுகாயை தானமாக கொடுப்பது லாபத்தையும், சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications