மேஷம், ரிஷப ராசியினருக்கு பணத்துக்குப் பஞ்சமில்லை.. ஆனா எச்சரிக்கையா இருங்க, பேசினா போச்சு

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: மேஷம் முதல் ரிஷப ராசிக்காரர்களுக்கு சித்திரை 29 முதல் வைகாசி 4 வரை அதாவது மே 12 முதல் 18 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-mesham-rishabam-aries-taurus-people-will-get-in-may-12

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு கழுத்துப் பகுதியில் கவனம் செலுத்துவது நல்லது. விஷ்ணு சகஸ்கர நாமம், விஷ்ணு காயத்ரி, விஷ்ணு வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். பள்ளிகொண்ட பெருமாளை வழிபாடு செய்து வருவது நல்ல பலன்களைத் தரும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். அதில் கவனமாக இருந்தால் மற்ற எல்லா விஷயங்களிலும் நன்மை ஏற்படும்.

தைரியம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். மனதுக்குப் பிடித்த விருதுகள் வந்து சேரும். கெளரவம் ஏற்படும். பணத் தட்டுப்பாடுகள் தீரும். முதலீடுகள் வந்து சேரும். திட்டமிட்டு வேலை செய்யத் தொடங்குவீர்கள். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பெயர், புகழ் உண்டாகும்.

கொடுத்த வாக்கை குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் காப்பற்றக்கூடிய அமைப்பு ஏற்படும். சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி உண்டாகும். தேக ஆரோக்கியத்தை நன்றாகப் பார்த்துக் கொள்வதோடு, உடற்பயிற்சிக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷபத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே வைகாசி. மேலதிகாரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அண்டை அயலார் வீட்டு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நரம்பு, கண், தலை, முதுகு தண்டுவடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதீத வலி உண்டாகும். விநாயகர் மந்திரம், அனுமன் சாலிஷா கேட்பது, படிப்பது நல்லது.

அனுமன் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு ஆலோசனைகள், அறிவுரைகள் கொடுத்தால் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எந்த ஒரு துறையில் இருந்தாலும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். சட்டத்துக்குப் புறம்பானவர்களின் நிழல் அண்டாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+