மிதுன ராசிக்கு தலைக்கு மேல் கத்தி.. ஆபத்தும், அதிர்ஷ்டமும் காத்திருக்கு.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 30 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம் வார ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். கழுத்து, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கண்களில் பிரச்சனை, இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்து மாத்திரை உட்கொள்ளுபவர்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும்.
கவனம்
ஆனி மாதத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளில் நீங்களும் ஒருவர். சட்ட சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத நட்புகளால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும் என்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கையெழுத்து போடும்போது ஆவணங்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துவிட்டு கையெழுத்து போடுவது நல்லது.
உடற்பயிற்சி
சூரியனும், குருவும் உங்கள் ராசியில் இருக்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் சிறிய வாக்குவாதங்கள் கூட பெரிய பாதிப்புகளைக் கொடுக்க நேரிடும் அபாயம் உள்ளது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்வது நல்லது. இல்லையெனில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பாக்கியம்
தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அதன் மூலமாக ஆதாயங்கள் கிடைக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகள், தடைகள் அனைத்தும் நீங்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிப்பது நல்லது. கோபத்தை மட்டும் தவிர்த்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
சனிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு அளிப்பது பெரிய பாதிப்புகளில் இருந்து பரிபூரண விடுதலையைக் கொடுக்க உதவும். துர்க்கை தேவி வழிபாடு, துர்க்கை தேவி மந்திரம், துர்க்கை கவசம், துர்க்கை காயத்ரியை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது நல்ல மாற்றத்தை ஏற்படும். ஆண்டிற்கு ஒருமுறை பட்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று வருவது உங்களுக்கு அற்புதத்தை ஏற்படுத்தும். அனுமன் சாலிஷா கேட்பது நல்லது.












Click it and Unblock the Notifications