மிதுனம், கடக ராசிக்கும் ஜாக்பாட் யோகம்.. பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணம் கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: வைகாசி மாதம் மே 27 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-mithunam-kadagam-gemini-cancer-people-will-get-in-may-2

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தொழில், படிப்பு, வியாபாரம், உத்தியோகம் ரீதியாக அற்புதமான யோகங்கள் கிடைக்கும். பிள்ளைகளின் அனுகூலம், பெற்றோர், துணையின் அனுகூலம் கிடைக்கும். உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், கடல் கடந்த பயணங்கள், தெய்வமார்க்க பயணங்கள் அதிஅற்புதத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். முருகர் வழிபாடு, கந்தர் அனுபதி எனும் பாடலைக் கேட்பதன் மூலம் நிறைய மாற்றங்கள் உண்டாகும்.

எடுத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தேக ஆரோக்கியத்தில் வயிறு, கழிவுப் பாதையில் சிறு சிறு உபத்திரவங்களும் பெரிதாக மாறக்கூடிய காலகட்டமாக இருக்கும். பெண்களாக இருந்தால் ஹார்மோன் குறைபாடுகள் மிக அதிகளவில் ஏற்படும். ஹீமோகுளோபினில் பிரச்சனைகள் இருக்கக்கூடிய மிதுன ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

சுபகாரியத் தடைகளில் இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும். மிதுன ராசிக்காரர்கள் இருக்கக்கூடிய வீட்டில் சுப விரைய பிராப்தம் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் வாக்குவாதம் இல்லாமல் இருப்பதும், பெற்றோர், பெரியோருக்கு சிறு தேக ஆரோக்கிய குறைபாடு இருந்தாலும் மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது.

எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம், அனுகூலம் ஏற்படும் அற்புதமான வாரமாக இருக்கும். பெற்றோரின் நீண்டநாள் பிரச்சனைகள் ஒன்று சரியாகும். இடமாற்றம் என எந்தவொரு மாற்றம் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமான அமைப்பு உள்ளது. லாபமும், சந்தோஷமும் ஏற்படும். துர்கை வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தி தரும். துர்கை கவசம், துர்கை காயத்ரி, அபிராமி அந்தாதி போன்ற தேவியின் பாடல்களைப் பாடுவது அல்லது கேட்பது நல்ல பலன்களை அள்ளித் தரும். அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும் பிராப்தம் உண்டு.

அசிடிட்டி பிரச்சனைகளில் அதீத கவனமாக இருப்பது நல்லது. வயிற்றில் ஏதோ ஒரு பாதிப்பு இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். கோபம் அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் தர்க்கம் செய்வீர்கள். பிள்ளைகளை விரோதிகளாக பார்ப்பீர்கள். அவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளை திட்டுவது, சபிப்பது போன்றவற்றை செய்யவே கூடாது.

அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 ஆவது பாடல்களை படிக்கக் கூடியவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். லாபம், சந்தோஷம் ஏற்படும். தேவையற்ற மன அழுத்தம் குறையும். வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகளுக்கு வரும் பிராப்தம் உண்டாவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனுகூலமான அமைப்பையும், சந்தோஷமான அமைப்பையும் ஏற்படுத்தி தரும்.

இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். நீண்டநாள்களாக இருந்து வந்த நோய்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+