ரிஷப ராசிக்கு வாயில் தான் கண்டம்.. அதிர்ஷ்டம், பணம் நிச்சயம்.. பேச்சினால் வரும் ஆபத்து.. ரொம்ப உஷார்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 30 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு காது, மூக்கு, தொண்டை, சளி தொடர்பான பிரச்சனைகளில் அக்கறையாக இருப்பது நல்லது. பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. வீண் வார்த்தைகளால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாகப் பேசுவது நல்லது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அனுகூலம்
உறவினர்களுடன் வாக்கு வாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. எடுத்த அனைத்துவிதமான காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். வேற்று மொழி, மதத்தினரால் அதிக அளவில் ஆதாயம் உண்டாகும். பண வரவில் அனுகூலங்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்தவர்கள் இனி உற்சாகமாக செயல்படும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரம் ரீதியான பிரச்சனைகள் நீங்கி, முன்னேற்றத்தைக் காண்பீர்கள்
குடும்பத்தில் மகிழ்ச்சி
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் உண்டாகும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்கள் திடீரென எடுக்கும் முடிவுகள் அனைத்தும் ஆச்சரியத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்த பாதிப்புகள் அனைத்தில் இருந்தும் பரிபூரணமாக விடுதலை பெறுவீர்கள். தாய் வழி உறவு, தந்தை வழி உறவின் மூலம் ஏற்றம் பெறுவீர்கள். எந்தப் பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை உண்டாகும்.
பண வரவு, வழிபாடு
நல்ல பண வரவு அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். பேச்சில் மிகுந்த கவனமும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நன்மையை ஏற்படுத்தும். கடன்களை அடைத்து முடிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். முதலீடுகளை செய்யத் தொடங்குவீர்கள். பார்வதி தேவி வழிபாடு நற்பலன்களைத் தரும். கடன் பிரச்சனைகள், பணப் பற்றாக்குறைகள் நீக்கும். உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக தீரும்போது பார்வதி தேவிக்கு வெண்மை நிற புடவை சாற்றுவது நன்மைகளைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications