சிம்மம், கன்னி ராசியினருக்கு வீசும் அதிர்ஷ்ட காற்று.. பண மழையில் நீச்சல் அடிக்கப் போறீங்க
வார ராசி பலன்: ஏப்ரல் 28 முதல் மே 4 ஆம் தேதி சிம்மம், கன்னி ராசியினருக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தாய் வழி, தந்தை வழி உறவு மேன்மை அடையக் கூடிய அமைப்பு. தொலைதூர பயணத்துக்கு திட்டமிட்ட விஷயங்கள் சாத்தியமாக மாறும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அனகூலத்தையும், சந்தோஷத்தையும் பெற்றுத் தரும். தலைவலி, காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
புதிய அறிமுகத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் புகழக் கூடியவர்கள் உங்களுக்குத் தேவையில்லாத உபத்திரவத்தை உருவாக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். செவ்வாய்க்கிழமைகளில் பசு மாட்டுக்கு அகத்திக்கீரையைத் தவிர மற்ற உணவுகளை அளிப்பது அனுகூலத்தைப் பெற்றுத் தரும். மகாலட்சுமி வழிபாடு, மகா விஷ்ணு வழிபாடு, விஷ்ணு காயத்திரி, விஷ்ணு மந்திரங்கள் ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
துணையிடம் இருந்து வந்த மனத் தாங்கல்கள் படிப்படியாகத் தீருவது பேரானந்தத்தைப் பெற்றுத் தரும். திடீர் முடிவுகள் பெரிய சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறுவது அனுகூலமான அமைப்பையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும், உத்தியோகத்தில் அதிக சந்தோஷத்தைப் பெறக் கூடியவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்.
தொழில் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்தி, சந்தோஷம், ஏற்றம், நிம்மதி, உத்தியோகம், வியாபாரம் பெரிய அளவு நம்பிக்கையை ஏற்படுத்தும். அரசுத் துறைகள், அரசியல்வாதிகளுக்கு திடீரென உங்களை ஆவேசப்படுத்தி எதிரிகள் பலம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், பேசுகின்ற வார்த்தையில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குறிப்பாக அரசுத் துறை, அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுப காரியத் தடைகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதற்றம் குறையும், பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். பிள்ளைகளின் உத்தியோகத் தடை, படிப்புத் தடை, வியாபாரத் தடை, தொழில் தடையில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியடையும்.
அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும். சுப விரைய பிராப்தம் அதிகரித்துள்ளதால் வெள்ளிக்கிழமை மதிய வேளையில் ஏழைகளுக்கு எலுமிச்சை சாதம் அல்லது எலுமிச்சை பழச்சாறு கொடுப்பது மிகப்பெரிய பலன்களை ஏற்படுத்திக் கொடுக்கும். முட்டி வலி, ஜாயிண்ட் பெயின், அலர்ஜி போன்ற விஷயத்தில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும்.
பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பெற்றோருடன் சிறிய வாக்குவாதங்கள் வருத்தத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி மன நிம்மதியைத் தரும். தொடர்ச்சியாக இருந்த மனத் தாங்கல்கள் தீரத்தீர மனதில் இருந்த பாரங்கள் குறையக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும்.
பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். சட்டென்று எடுக்கக்கூடிய முடிவுகள் பெரிய பாராட்டையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். பெற்றோர் பெரியோர்களுக்கு அனுகூலம் ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். மனதில் நம்பிக்கை ஏற்படும். இனம் புரியாத வருத்தங்கள் நீங்கும். துணையை மனம் நோகடிக்காமல் இருப்பது புத்திசாலித்தானமான அமைப்பாக இருக்கும். நீண்ட நாட்களா சந்திக்க வேண்டிய நபர்களை சந்திப்பது பெரிய அளவு நம்பிக்கை, சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications