சிம்மம், கன்னி ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி.. புதிய நபர்களிடம் ரொம்ப கவனம்.. கொஞ்சம் மிஸ் ஆனாலும்!

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: சித்திரை 22 முதல் 28 வரையிலான மே 5 முதல் 11 ஆம் தேதி வரை சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Weekly rasi palan Lucky zodiac signs

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நரசிம்மர் வழிபாடு செய்வது நல்லது. இதனால், உங்களுக்கும், உங்கள் வாழ்க்கை துணைக்கும் உள்ள பிரச்சனைகள், மனத் தாங்கல்கள் நிவர்த்தியாகும். பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையை ஏற்படுத்தும். வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், அனுகூலம் காணப்படும். அஷ்டமத்தில் இருக்கம் சனிக்காக தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது யோக பலத்தை பெற்றுத் தரும்.

தாய் வழி, தந்தை வழி உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிரச்சனை ஏற்படும் இடங்களில் இருந்து நகர்ந்து கொள்வது நல்லது. ஏதாவதொரு மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். காதல் அமைப்பில் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. துணை அல்லது துணைவியாரிடம் உங்களுக்கு ஏற்றாற்போல காதல் அமைப்பு காணப்பட்டாலும் உங்களுக்குள் இருக்கும் குறையை பெரிதாக்கி கொள்ளாமல், நிவர்த்தி செய்து கொள்வது நம்பிக்கை, அனுகூலத்தை தரும்.

இழுபறியான நிலைமை படிப்படியாக மாறுவது கண்கூடாகப் பார்க்கலாம். புதிய அறிமுகங்களிடம் சிறிது கவனமாக இருப்பது நல்லது. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஆனந்தத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம், நல்ல அமைப்பு ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரிய தடைகள் பரிபூரணமாக நிவர்த்தி ஆகும். அலர்ஜி தொந்தரவில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மேலதிகாரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். விரையங்கள் அதிகமாக இருப்பதால் விலையுயர்ந்த பொருள்கள் விஷயத்தில் அதீத கவனமாக இருப்பது முக்கியம். நவக்கிரகங்களில் இருக்கும் சூரியனுக்கு வழிபாடு செய்வது நம்பிக்கை, சந்தோஷத்தை தரும். ஞாயிற்றுக்கிழமை தினங்களில் பசு மாடுகளுக்கு கோதுமை தவிடு வெல்லம், கோதுமை மாவு வெல்லம், கோதுமை சப்பாத்தி வெல்லம் கலந்துகொடுப்பது நல்லது. இதன்மூலம் பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

குடும்பத்தில், மேலதிகாரிகள், தொழில் விஷயத்தில், புதிய அறிமுகத்தில் சிறிய சண்டைகள் கூட தேவையில்லாத குழப்பம், சங்கடத்தை ஏற்படுத்திவிடும். சட்ட விரோத நபர்களின் நிழல் கூட படாமல் பார்த்துக் கொள்வது யோக பலத்தை தரும். இழுபறியாக இருந்த பலவித சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். எடுத்த காரியத்தில் ஜெயம், அனுகூலம், யோக பலம், நம்பிக்கை ஏற்படும்.

இழுபறியாக இருந்து வந்த நிலைமை படிப்படியாக மாறுவது ஏற்றம் அனுகூலம் நம்பிக்கையை பெற்றுத் தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக தடைகள் தவிடு பொடியாகக்கூடிய நல்ல காலகட்டம். நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு வெறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

பிறர் குடும்பத்தில் உங்கள் தலையீடு கூடவே கூடாது. உங்கள் குடும்பத்தில் மற்றவர்களை தலையிட விடக் கூடாது. சளி, ஒற்றை தலைவலி போன்ற தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+