ரிஷப ராசியினர் நினைச்சது அப்படியே நடக்க போகுது – இதை நோட் பண்ணிக்கோங்க
வார ராசி பலன்: ஆடி மாதம் 17 ஆம் தேதி பிறக்கவுள்ளது. ஜூலை 14 முதல்14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷபம் ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் துவங்கப் போகிறது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமாக இருக்கும். உத்யோகத்தில் உயர்வு, அணுகூலம் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த தடைகள் விலகும். தடைபட்ட பலன்கள் ஒவ்வொன்றாக நடக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். அரசுப் பணியாளர்கள், அரசியல் வாதிகளுக்கு ஏற்றம் தரும் வாரமாக இருக்கும்.
தன்னம்பிக்கை வெற்றி
தொழிலில் லாபம் நன்றாக இருக்கும். காரியங்களில் இழுபறியாக இருந்த நிலை மாறி எல்லாவற்றிலும் வெற்றி மேல் வெற்றி குவியும். மனதில் நினைத்த காரியங்கள் நடைபெறும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் உயரும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். தொலைதூர தொடர்புகளால் நன்மை உண்டாகும். வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயம் ஏற்படும்.
பண வரவு சிறப்பு
உத்யோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சக பணியாளர்களும் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. முதலீடு மிகப்பெரியளவுக்கு கைக்கொடுக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் அந்யோநியம் அதிகரிக்கும். காதல் உறவில் இனிமைக் கூடும்.
குடும்பம் ஆதாயம்
குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் குறைந்து, மனதில் மகிழ்ச்சி ஏற்படும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி ஏற்படும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் இருப்போருக்கு வெற்றி கிடைக்கும். தாய், தந்தையால் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
கவனம்
ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். வயிறு, கழுத்து, முதுகு தண்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளிடம் கோபம் வேண்டாம். முடிந்தவரை பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். செவ்வாய்கிழமை நாளில் உங்கள் வீடு அருகே உள்ள அம்மன் கோயில் சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications