Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு
Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உயரும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாராஹி, சூளினி, பிரித்யுங்கரா போன்ற உக்கிர தெய்வ வழிபாடுகள் நன்மையைத் தரும். ரத்தபந்த உறவுகள் விஷயத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
பொறுமை அவசியம்
உறவுகள், அக்கம்பக்கத்தினரால் தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய நன்மைகள் நடக்கக்கூடிய காலகட்டம். பிள்ளைகளின் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. ஆடி மாதம் வரை சிறிது பொறுமை காப்பது நன்மை பயக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். எந்த விஷயத்திற்கும் அவசரப்படாமல் இருப்பது நன்மை பயக்கும்.
குரு பார்வை
குரு பார்வையில் இருப்பதால் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நன்மைகள் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில், வெளியிடம், புதிய தொழில், புதிய அரசியல், புதிய ஒப்பந்தம் என சகலவிதத்திலும் ஏற்றம் ஏற்படும். பெரிய வாய்ப்புகள், மாற்றங்கள் காணப்படும். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மணவாழ்க்கை சிறந்து விளங்கும். எல்லா விஷயங்களையும் எளிமையாக முடிப்பீர்கள்.
குருசுக்கிரன்
மனதில் உத்வேகம் அதிகரிக்கும். சண்டை சச்சரவுகள் சகோதரர்களுக்கிடையே வருவதற்கான வாய்ப்புள்ளது. பஞ்சம ஸ்தானத்தில் குரு சுக்கிரன் சேர்ந்திருப்பதால் காதல் கைகூடும். குழந்தை பாக்கியம் ஏற்படும். மனமகிழ்ச்சி தரக்கூடிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சரியாக நடக்கும். அனைத்து விதமான தடைகளும் பரிபூரணமாக நீங்கும். மன சந்தோஷம் அதிகரிக்கும்.
வழிபாடு
பாக்கியத்தில் இருந்து பார்க்கும் குரு, பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரனால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். குலதெய்வ பிரார்த்தனை செய்வது ஏற்றத்தைத் தரும். பொருளாதாரம் ரீதியாகவும், சந்தோஷம் ரீதியாகவும் 80












Click it and Unblock the Notifications