வார ராசி பலன்: மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு அடிச்சது ஜாக்பாட்?.. கிடைக்கும் பலன்கள் என்ன?
Subscribe to Oneindia Tamil
Weekly Rasi Palan: ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்கான பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தாயின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வழக்கு தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

மனைவியின் உறவினர்கள் வழியாக உதவிகள் கோரி உங்களை நாடலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையான சூழல் உருவாகும். புதிய தொழில்களைத் தொடங்கி அதில் வெற்றி பெறுவதற்கான சாதகமான காலமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். எதிர்பார்த்த இடங்களுக்கு இடமாறுதலும் கிடைக்கும்.
உங்களுடைய கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். பணிச்சுமை, மன அழுத்தத்தில் இருந்து விடுதலை அடைவீர்கள். தொழில் செய்பவர்களின் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் விலகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். சமுதயாத்தில் பெயர், புகழ், மதிப்பு, அந்தஸ்து உயரும். புதிய உத்வேகமும் தன்னம்பிக்கையும் மனதில் பிறக்கும்.
குழந்தை பாக்கியத்துக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்ல அனுகூலமான பலன்களை அள்ளித் தரும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக நேரங்களை செலவிடுவீர்கள். வேறு மொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். மாணவர்கள், பயிற்சி மாணவர்கள் படிப்பில் நல்ல கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சமூக சேவை செய்வது, பொது காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல அனுபவங்களை பெற்றுத் தரும்.
அருகில் இருக்கும் அனுமன் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். வெற்றிலை மாலை கட்டி வழிபடுவது நல்ல பரிகாரமாக இருக்கும். அதிர்ஷ்ட பலன்களை அள்ளித் தரும்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் லாபம் பெறுவீர்கள். உங்களுடைய பகைவர்களால் ஏகப்பட்ட பணம் விரையமாகியிருக்கும். அந்தப் பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் விடுதலை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவி, குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது. உங்களுடைய பணத் தேவைகளை அறிந்து கணவன், மனைவி செயல்படுவார்கள். வேலை பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் சுமூகமான சூழ்நிலை உண்டாகும். எடுத்த காரியங்களை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள்.
பண வரவு அதிகரிக்கும். வேலைகளில் உரிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களிடமிருந்து விலகி இருப்பார்கள். கட்டடம், வீடு, மனை சார்ந்த தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பால் புகழைப் பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிக்கலின்றி முடிவடையும்.
வேலை செய்யும் பெண்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலை பறிபோவதற்கான வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் செய்யும் பெண்களுக்கு நல்ல ஆதாயம் உண்டாகும். மருத்துவம், பொறியியல், விவசாயம் போன்ற துறைகளில் உள்ள பெண்களுக்கு நல்ல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி மிகுந்த காலமாக இருக்கும். விரும்பிய துறைகளை எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு யோகம் உண்டாகும். படிப்பில் சிறந்து விளங்குவார்கள். சனிக்கிழமை தோறும் சிவன் கோயிலில் வழிபடுவதும், நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுவதும் பல நன்மைகளைக் கொடுக்கும்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவலான காரியங்களையும் எளிமையாகச் செய்து முடிக்கும் காலமாக இருக்கும். வீடு, மனை, வாகனம் போன்ற விஷயங்களில் மராமத்துப் பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர், வெளிநாட்டு பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பயணங்களின் போது கவனமாக இருப்பது நல்லது. பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களுடன் கனிவுடன் பேசுவதும், செயல்படுவதும் நல்லது. இல்லையெனில் வீண் பிரச்சனைகளிலும், மனக்குழப்பங்களிலும் சிக்கும் சூழல் உண்டாகும். பதவி உயர்வு, பணி இடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரிகளுடன் இணக்கமாக இருப்பது நல்லது. வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். முன் எப்போதையும் விட நல்ல லாபங்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.
பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. கணவரிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கணவருடன் இணைவதற்கான சூழல் ஏற்படும். உங்களால் உங்களுடைய கணவருக்கு நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் நினைத்ததை சாதிக்கக்கூடிய காலமாக இருக்கும்.
வியாழக்கிழமை தோறும் நவக்கிரக கோவில்களுக்குச் சென்று நெய் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். முன்னோர்களையும், குல தெய்வத்தையும் வழிபடுவது அதிர்ஷ்டமான பலன்களைத் தரும்.


Click it and Unblock the Notifications
