கன்னி ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. கண்டக சனிக்கே டஃப் கொடுக்கும் காலகட்டம்.. இனி தொட்டதெல்லாம் ஹிட்டு
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் மனையில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். வரும் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தால் இனிமேல் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.

ஜூலை 13 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான 83 நாட்கள் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அதேபோல, அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கிறார். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 5, 6 க்கு உரியவர். கடன், நோய், எதிர்ப்பு, வம்பு, வழக்கை குறிக்கக் கூடிய இடம். தற்போது 7 ஆம் இடம் எனும் திருமண ஸ்தானத்தில் சனி அமர்ந்திருக்கிறார். வக்கிரமடையப் போகிறார். உங்கள் ராசியை சனி பார்ப்பதால் கண்டகச் சனி உங்களுக்கு இருக்கிறது. மந்தம், உடல்நலக் குறைபாடு, காரியத் தடை, சுறுசுறுப்புத் தன்மை ஆகியவை இனி நீங்கும் காலமாக இருக்கும்.
சுறுசுறுப்பாக மாறுவீர்கள்
இதுவரை கெடுதல்களைச் செய்து வந்திருந்தால் இனி நல்லவற்றை சனி பகவான் கொடுக்கவுள்ளார். மந்தத் தன்மையை விட்டு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். காரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். உங்களை தவறாக நினைத்துக் கொண்டவர்கள் அனைவரும் நண்பர்களாக மாறும் காலகட்டமாக இருக்கும். நண்பர்கள் வட்டத்தில் இருந்து வந்த விரிசல்கள் அகலக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
திருமண யோகம்
உங்களுடைய தனித்திறமை மேம்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும். பூர்வீகத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். காதல், காதல் சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமணம், சுபகாரியங்கள் நடக்கும் யோகம் வரும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். சமுதாயத்தில் உங்களுக்கு இருந்த அவப்பெயர் நீங்கும். குழந்தைகள் சார்ந்த விஷயத்தில், படிப்பில், ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும்.
அனுகூலம்
குழந்தைகளின் படிப்பில் அடுத்த பரிணாமத்தை, முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அரியர்களை மாணவர்கள் கிளியர் செய்வார்கள். கடன், நோய், எதிர்ப்பு, வம்பு, வழக்கு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு இனி நன்மை ஏற்படும். கடன் பிரச்சனைகள் தீரும். கடனைத் தீர்க்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். நல்ல தைரியத்தைப் பெறுவீர்கள். வேலைக்கு முக்கியத்துவத்தை கொடுப்பீர்கள். உழைப்பால் உயர்வு பெறும் காலகட்டமாக இருக்கும்.
முன்னேற்றம்
இடமாற்றம், பதவி உயர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆனால், வேலை நன்றாக இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சனி வக்கிரமாக இருப்பதால் இயல்புக்கு மாறான நிலையை கொடுப்பார். அதனால், நன்றாக இருப்பவர்களுக்கு கெடுதல்களும், பாதிப்புகளைச் சந்தித்து கொண்டிருப்பவர்களுக்கு நற்பலன்களையும் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
பாக்கியம்
சனி வக்கிர நிலையில் 3 ஆம் பார்வையாக 9 ஆம் இடம் எனும் பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் குழந்தை பாக்கியம், தன பாக்கியம், வெளிநாடு யோகம், பண வரவு, வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு விஷயங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும் காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு இனி அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். தடைகளை, வலிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த அனைத்து விஷயங்களிலும் வெற்றியைக் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
தொழில்
எதிர்ப்பாளர்கள் விலகும் காலகட்டமாக இருக்கும். சொந்த தொழில் செய்யும் எண்ண ஓட்டங்கள் வரும். 10 ஆம் பார்வையாக சனி 4 ஆம் இடத்தை பார்ப்பதால் இனி சுக ஸ்தானம் அற்புதமாக இருக்கும். வீடு, வண்டி, வாகனம், நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். குழப்பமான மனநிலை மாறும். மனம் தெளிவு பெறும். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பான காலகட்டமாக இருக்கும்.
-
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications