மகரத்துக்கு கோடீஸ்வர யோகம்.. சுக்கிரன், குரு, சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சனி பகவான் தற்போது மீன மனையில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். வரும் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தால் இனிமேல் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.

Sani vakra peyarchi palan Magaram lucky zodiac signs

ஜூலை 13 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான 83 நாட்கள் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அதேபோல, அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கிறார். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகர ராசி பலன்

மகர ராசிக்காரர்களுக்கு ராசியாதிபதி, 2க்கு உரியவர் தனம், வாக்கு, குடும்பம், வாக்கு ஸ்தானத்தின் அதிபதி சனி பகவான். தற்போது 3 ஆம் இடம் எனும் முயற்சி ஸ்தானத்தில் வக்கிரமாகிறார். மந்தமாக இருக்கக்கூடிய சனி அப்படியே சுறுசுறுப்பாகப் போகிறார். மந்தமாக இருந்த விஷயங்கள் அனைத்தும் இனி சுறுசுறுப்படையும். ஏழரை சனி தற்போது முற்றிலுமாக விலகிவிட்டது. ஏழரை வருடங்களாக தடைப்பட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் வேகமடைய ஆரம்பிக்கும்.

வெற்றி மேல் வெற்றி

எந்த விஷயத்தை செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களோ அதனை எடுத்து செய்து வெற்றியடையக் கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். உழைப்புகேற்ற ஊதியம் கிடைக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் இனி புரிந்துகொள்வார்கள். எடுத்த காரியங்களில் வெற்றி, முடிவுகளில் தெளிவு, பிடிவாதத் தனம் நீங்குவது போன்ற அனுகூலம் உண்டாகும்.

பிரச்சனைகள் நீங்கும்

உங்களுடைய வாழ்க்கை பிரகாசமாகும் காலகட்டமாக இருக்கும். மனம் நன்றாக இருக்கும். சுய கெளரவம் மேலோங்கும். உங்களுடைய தனித் திறமைகளை வளர்க்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். நீங்கள் யாரென்று வெளிப்படுத்தக்கூடிய தன்மை உண்டாகும். உங்களை நான்கு பேர் பார்த்து வியக்கும் தன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். 2 ஆம் அதிபதி சனி பகவான் தனக்கு 2 ஆம் இடத்தில் அமர்ந்திருந்ததால் குடும்பத்தில் பாதிப்புகள், சில குழப்பங்கள், உறவுகளுக்கிடையே பிரச்சனைகள், கணவன் மனைவிக்குள் இருந்த ஒற்றுமையில்லாத தன்மை அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

அந்நியர் தலையீடு

பிரிந்த கணவன், மனைவிக்குள் சேரும் அமைப்பு உண்டாகும். கணவன், மனைவிக்குல் புரிதல் ஏற்படும். தனது கணவர், மனைவி என்ற பொதுநல எண்ணம் வரும். குடும்பத்தில் ராகு அமர்ந்திருப்பதால் பிரம்மாண்டமான தன்மை உண்டாகும். குடும்பத்துக்குள் மூன்றாம் நபர் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தைரியம், வீரியத்துடன் செயல்படுவீர்கள். ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும். மனம் தெளிவடையும்.

குழந்தை பாக்கியம்

பயணங்கள் சிறப்பு பெறும். ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைத் துறையில் இருக்கும் மகரத்துக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையில் சாதிக்க கூடிய காலகட்டமாக இருக்கும். சனி பகவான் 3 ஆம் பார்வையாக 5 ஆம் இடத்தைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். அக்டோபர் மாதத்தில் நிச்சயமாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பதவி உயர்வு

பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம், வேலை மாற்றம், பதவி மாற்றம் உண்டாகும். தந்தை சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பாதிப்புகள், உடல் நலக் கோளாறுகள், மருத்துவமனை செலவு, தந்தைக்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளி அனைத்தும் சரியடையும் காலகட்டம். தந்தையால் ஆதாயம் பெறும் காலகட்டமாக இருக்கும். தந்தை உடல்நிலை சீரடையும்.

சுகபோகம்

ஆராய்ச்சித் துறை சம்பந்தப்பட்ட விஷயங்கள், கண்டுபிடிப்புகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம், வெளிநாடு வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் தொழில் தொடங்குவது, செட்டிலாவது, பிஆர் கிடைப்பது, அங்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு, உயர்கல்வி அனைத்தும் கிடைக்கும் யோகம் உண்டாகும். சுக்கிரன் வலிமையாக இருப்பதால் உங்களுக்கு ராஜயோகத்தை தரும் வாய்ப்பு கிடைக்கும். சுக போகங்களை சுக்கிரன் அள்ளிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+