சிம்மத்துக்கு அஷ்டம சனியால் அச்சமே வேண்டாம்.. திடீர் அதிர்ஷ்டம், பண மழை கொட்டப் போகுது.. என்ஜாய்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான் தற்போது மீன ராசியின் மனையில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். வரும் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தால் இனிமேல் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.

ஜூலை 13 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான 83 நாட்கள் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அதேபோல, அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கிறார். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 6க்கும், 7க்கும் உரியவர். கடன், நோய், எதிர்ப்பு, பகையைத் தரக்கூடியவர். தற்போது 8 ஆம் இடம் எனும் அஷ்டம ஸ்தானத்தில் வக்கிரமாக பயணிக்கப் போகிறார். சிம்ம ராசிக்கு பொதுவாக சனி பகவான் கெடுதலை செய்யக்கூடிய கிரகம். ஆனால், இப்போது சனி வக்கிரமாக இருப்பதால் தன் இயல்பை மாற்றி நல்ல பலன்களைக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை கெடுதலை செய்து கொண்டிருந்த சனி
உங்களுக்கு இனி நன்மையைக் கொடுக்கும்.
வேலைவாய்ப்பு
வேலையில் இருந்து வந்த அழுத்தம், அலைச்சல், டென்சன் ஆகியவை நீங்கும் காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். படித்த படிப்புக்கு உண்டான வேலை கிடைக்கும். கடந்த 3 மதங்களாக அலைச்சல், கெடுதல், வேலைப் பளு, உயர் அதிகாரிகளால் இருந்து வந்த தொந்தரவு, அழுத்தம் என அனைத்தும் நீங்கும் காலகட்டமாக இருக்கும்.
வெற்றி மேல் வெற்றி
இடமாற்றம், பதவி உயர்வு கட்டாயமாகக் கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பாதிப்புகள், சவால்கள் நீங்கும். தொழிலில் மந்த நிலை மாறி வேகமெடுக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். இனி எடுத்த காரியங்களில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனது திருப்தியாகும். இனி நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். 3 ஆம் பார்வையாக 10 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் வெளிநாடு யோகம் உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவீர்கள். அங்கேயே செட்டிலாகும் அமைப்பு ஏற்படும்.
திருமண யோகம்
குடும்பத்தில் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். திருமணம், சுப காரியம் நிச்சயமாக நடக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். இழுபறியான விஷயங்கள் அனைத்தும் இனி ஏற்றம் பெறும். உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் இனி உங்களைப் புரிந்து கொள்வார்கள். கணவன், மனைவிக்குள் புரிதல் ஏற்படும். சனி 10 ஆம் பார்வையாக 5 ஆம் இடத்தைப் பார்ப்பதால் குழந்தைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய நேரமாக இருக்கும்.
அனுகூலம்
பூர்வீகம் சம்பந்தப்பட்ட சொத்துப் பிரச்சனை, பாகப் பிரச்சனையில் நிவர்த்தி ஏற்படும். உறவுகளுக்குள் சமூக நிலை ஏற்படும். குழந்தைகளின் படிப்பு சார்ந்த விஷயங்களில் நன்மை ஏற்படும். முன்னேற்றம் மிக்க காலகட்டமாக இருக்கும். தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும். இறைவனின் அனுக்கிரகம் கிடைக்கும். அஷ்டம சனி காலத்தில் உங்கள் குலதெய்வத்தை வழிபடுவது அற்புதத்தை ஏற்படுத்தும்.
ஏற்றம்
138 நாட்கள் அஷ்டம சனியில் இருந்து விலகி, மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் காலகட்டமாக இருக்கும். நல்ல நிகழ்வுகள் எல்லாம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த நிலைமைகள் அனைத்தும் மாறும். பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வேலை, தொழில், வியாபாரத்தில் நன்மை, நினைத்த காரியங்களில் ஜெயம், லாபம் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
-
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications