மகா சிவராத்திரியில் கண் விழித்தே ஆக வேண்டிய ராசியினர் யார்?.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
மகாசிவராத்திரி: மஹா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படவுள்ளது. மாலை முதல் காலை வரை நான்கு கால பூஜைகளுடன் ஒவ்வொரு சிவாலயங்களிலும் மஹா சிவாராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த நன்னாளில் எந்தெந்த ராசியினர் கண் விழித்து சிவனை கட்டாயமாக வழிபட வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மனிதனுக்கு ஓராண்டுக்குத் தேவையான சக்தியை அளிக்கும் நாள்தான் மகா சிவராத்திரி. இந்த நன்னாளன்று தூங்காமல் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் பூர்வமான நிறைய விதிகள் உள்ளன. முதல் ஜாமத்தில் பிரம்மா சிவனை வழிபட்டதாக ஐதீகம். 6 மணி முதல் 9 மணி வரை அந்த முதல் கால பூஜை நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொள்வதால் தேக ஆரோக்கியம், ஆயுள் கண்டம் நீங்கும் என்பது விதி.

9 மணிக்குமேல் 11 மணிக்குள்ளாக மகா விஷ்ணு சிவனை வழிபட்ட ஜாமம். இந்த ஜாமத்தில் பூஜையை பிரித்து செய்வார்கள். பணத்தினால் கஷ்டப்படுபவர்களுக்கு இந்த பூஜை மிகவும் விசேஷமானது. பணக் கஷ்டமெல்லாம் நீங்கிவிடும். மகா விஷ்ணுவே பூஜை செய்யக்கூடிய இரண்டாம் கால பூஜையில் பங்கேற்றால் உங்களுடைய கடன்கள், பணம் சார்ந்த கஷ்டங்கள் எல்லாம் பறந்துவிடும்.
மூன்றாவது ஜாமம் இருப்பதிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஈசனில் பாதியாக இருக்கும் சக்தி. அம்பிகையே சிவனை வழிபட்டதாக ஐதீகம். இந்த ஜாமத்தில் ஜோதியாக சிவன் காட்சியளிக்கிறார் என்று நம்பப்படுகிறது. திருஷ்டி, கஷ்டம், மனபாரம் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும். அப்படிப்பட்ட அற்புதமானது மூன்றாவது ஜாமம்.
நான்காவது ஜாமம் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த பூஜை நடைபெறும். அதிகாலை 4.30 மணியில் இருந்து 6.30 வரை இந்த பூஜை நடைபெறும். 12 ராசிக்காரர்களுக்கு மஹா சிவராத்திரி என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஆனால், சனியினுடைய பார்வை வரக்கூடியவர்கள், சனியால் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இந்த மகா சிவராத்திரி பூஜையில் கலந்துகொள்வது நல்ல பலன்களைத் தரும்.
மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், ஜென்மசனிக்குள் செல்லும் மீன ராசிக்கு இந்த மகா சிவாராத்திரி மிகவும் முக்கியமான நாளாகும். இந்த நாளில் இந்த 6 ராசிக்காரர்களும் சிவராத்தியில் விரதம் இருந்து, கண் விழித்து வழிபடுவது அற்புதமான பலன்களைக் கொடுக்கும். செல்வம் செழிப்பு உண்டாகும். வீட்டில் உள்ள பணக் கஷ்டங்கள் நீங்கும்.
உங்களைச் சுற்றியிருக்கும் தீமையான விஷயங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். மனதில் தெளிவு, சிந்தனையில் தெளிவு பிறக்கும். கடன் துன்பங்களில் இருந்து பரிபூரணமாக விடுதலை அடைவீர்கள். அனைத்துவிதமாந நல்ல பலன்களும் உங்களை வந்து சேரும்.












Click it and Unblock the Notifications