Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதன் மகாதிசை..17 ஆண்டுகள் அள்ளிக்கொடுக்கப்போகும் ராஜயோகம்..யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்

ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதன் திசை முதல் திசையாக வரும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நன்றாக இருந்தவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன ஆச்சு ஏதாவது தசாபுத்தி சரியில்லையா என்று கேட்பார்கள். நல்ல புத்தியை கொடு என்று இறைவனை வேண்டிக்கொள்வார்கள். நம்முடைய ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தசாபுத்தி நடைபெறும். அதுவும் புதன் திசை காலத்தில் 17 ஆண்டுகள் நடைபெறும். சுக்கிர திசை, ராகு திசைக்கு அடுத்தபடியாக புதன் திசைதான் அதிக ஆண்டுகள் நடைபெறும். புதன் திசை காலத்தில் என்னென்ன நடைபெறும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

திசைகள் மொத்தம் 9 கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, வியாழன், சனி, புதன் என வரிசையாக வரும். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் 9 திசைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதன் திசை முதல் திசையாக வரும். பிறந்த ஜாதகத்தில் புதன் பலமாக அமைந்து இருந்து ஒருவருக்கு குழந்தை பருவத்தில் புதன் திசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல் அழகான பேச்சுத் திறன் உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் சாதனைகள் செய்யும் அமைப்பு, நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல், பெரியோர்களின் ஆசி போன்ற யாவும் அமையும்.

மத்திம வயதில் புதன் திசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல் கௌரவமான பதவிகளை அடையும் வாய்ப்பு கிடைக்கும். பேச்சுத்திறனால் சமுதாயத்தில் நல்ல கௌரவமும் உயர்வு போன்ற யாவும் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் கௌரவ பதவிகளை வகிக்கும் வாய்ப்பு நல்ல ஞாபக சக்தி, மற்றவர்களை வழி நடத்தி செல்லும் ஆற்றல், சுறுசுறுப்புடன் செயல்படும் திறன், உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும்.

பிறந்த ஜாதகத்தில் புதன் பலமிழந்து இருந்தால் குழந்தைப் பருவத்தில் திசை நடைபெற்றால் காதுகளில் கோளாறு, பேச்சில் தெளிவில்லாமை மந்த நிலைமை உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் தடை, நரம்பு பிரச்சினை, ஞாபகமறதி நெருங்கியவர்களிடையே பகை, பேச்சில் நிதானமின்மை உண்டாகும். மத்திம வயதில் நடைபெற்றால் மனக்குழப்பம், இல்லற வாழ்வில் ஈடுபாடற்ற நிலை குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றமின்மை, உற்றார் உறவினர்களிடையே பகை, நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். முதுமை பருவத்தில் புதன் திசை நடைபெற்றால் நரம்பு தளர்ச்சி, ஞாபகமறதி, மூளையில் பாதிப்பு, உடல் பலவீனம், பொருளாதார நெருக்கடி, உறவினர்களிடையே பகை உண்டாகும்.

புதனுக்கு சுக்கிரன், சனி நட்புகிரகங்களாகும். புதன் இந்த நட்சத்திரங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும், இவர்களின் வீட்டிலிருந்தாலும் புதன் திசை வரும் காலங்களில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். சொந்த தொழில் யோகத்தை கொடுக்கும். நல்ல அறிவாற்றல் பேச்சு திறன் ஞாபக சக்தி, பலரை வழி நடத்தி செல்லும் ஆற்றல் உண்டாகும். பல லட்சங்கள் சம்பாதிக்கும் யோகம் அமையும். அதுவே புதன் பலமிழந்திருந்தால், மூட்டு வலி, கை கால் வலி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், ஆண்மை குறைவு, உடல் பலவீனம் உண்டாகும். பலவகை பிரச்சனைகளும் தேடி வரும். புதன் திசை ஒன்பது புத்தியாக பிரிக்கப்பட்டு அதன்படி வரிசையாக நடைபெறும். அதற்கேற்ப பலன்களும் கிடைக்கும்.

புதன் புத்தி

Who will get Raja yoga Budha Mahadasha which will take 17 years lucky for everyone

புதன்தசா புதன்புக்தி முதலாவதாக வரும். புதன் புத்தியானது 2 வருடம் 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும். புதன் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல்,பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். அதுவே புதன் பலமிழந்திருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஞாபகமறதி, நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

கேது புக்தி

Who will get Raja yoga Budha Mahadasha which will take 17 years lucky for everyone

புதன் திசையில் கேது புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும். கேது பலம் பெற்று இருந்தால் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். வீடு சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். தாராள தனவரவு, பெண்களால் நன்மைகள் கிடைக்கும். சொத்துக்கள் சேரும். புனித தலங்களுக்கு தரிசனம் செல்வீர்கள். அதுவே கேது பலமற்று இருந்தால் குடும்பத்தில் பிரச்சினையும் வேலையில் இடமாற்றமும் சில நேரங்களில் வேலை இழப்பும் ஏற்படும்.தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும்.

சுக்கிர புத்தி

Who will get Raja yoga Budha Mahadasha which will take 17 years lucky for everyone

புதன் திசையில் சுக்கிர புக்தியானது 2வருடம் 10மாதம் நடைபெறும். ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருந்தால் பண வருமானம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் சந்தோஷமும் உண்டாகும். பதவி உயர்வும் கிடைக்கும். சுக்கிரன் பலமற்று இருந்தால் உடல் நிலை பாதிக்கும் மர்ம உறுப்புகளில் நோய் ஏற்படும். அவமானம், வீண் விரயங்கள் உண்டாகும்.

சூரிய புத்தி

Who will get Raja yoga Budha Mahadasha which will take 17 years lucky for everyone

புதன் திசையில் சூரிய புக்தியானது 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும். ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசியலில் பெயர் புகழ் கௌரவம் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிரிகளை வெல்லக் கூடிய வலிமை உண்டாகும். அரசு வழியில் அனுகூலங்கள் கிடைக்கும். சூரியன் பலமிழந்திருந்தால் பகைவர்களால் விரோதம் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள் வரும். உடல் சூடு, கண்களில் பாதிப்பு அரசு வழியில் தொல்லைகள், வேலையில் பிரச்சினை உண்டாகும்.

சந்திர புத்தி

Who will get Raja yoga Budha Mahadasha which will take 17 years lucky for everyone

புதன் திசையில் சந்திர புத்தியானது 1 வருடம் 5 மாதங்கள் நடைபெறும். ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று இருந்தால் திருமண சுபகாரியங்கள் கைகூடும். காரியங்களில் வெற்றி, ஆடை ஆபரண சேர்க்கை, பூமி மனையால் யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சந்திரன் பலமிழந்து இருந்தால் தேவையற்ற அலைச்சல், தண்ணீரில் கண்டம், மனதில் வீண் குழப்பம் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும் மனநிம்மதி குறையும்.

செவ்வாய் புத்தி

 Who will get Raja yoga Budha Mahadasha which will take 17 years lucky for everyone

புதன் திசையில் செவ்வாய் புத்தியானது 11 மாதம் 27நாட்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி மனை யோகம், வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், நோய்கள், எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். அதே நேரத்தில் செவ்வாய் பலமிழந்து இருந்தால் ரத்த சம்மந்தமான பாதிப்புகள் வரும். உடன் பிறப்புகளிடையே வீண் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, காரியத்தடைகள் உண்டாகும்.

ராகு புத்தி

புதன் திசையில் ராகுபுக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும். ராகு புத்தியில் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். உயர் பதவி தேடி வரும். வீடு மனை வாங்குவீர்கள். பகைவரை வெல்வீர்கள். ராகு பலமற்று இருந்தாலும் விஷக்கடி தொந்தரவு வரும். வீடு இடம் மாற்றம் உண்டாகும். மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் உண்டாகும்.

குரு புத்தி

புதன் திசையில் குருபுத்தியானது 2 வருடம் 3 மாதம் 6 நாட்கள் நடைபெறும். ஜாதகத்தில் குருபகவான் பலம் பெற்றிருந்தால் தாராள தனவரவு, குடும்பத்தில் சுப காரியம் கைகூடி வரும். குடும்பத்தில் சுபிட்சம் சந்தோஷம் உண்டாகும். விஐபிக்களின் ஆதரவு கிடைக்கும். ஜாதகத்தில் குரு பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு உறவினர்களிடையே பகை ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனை, சுபகாரியங்களுக்கு தடை உண்டாகும்.

புதன் திசையில் சனி புத்தி

புதன் திசையில் சனி புத்தியானது 2 வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும். ஜாதகத்தில் சனி பகவான் பலம் பெற்றிருந்தால் தன தான்ய விருத்தியடையும் ஆடை ஆபரணம் சேரும். புண்ணிய ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வீர்கள். தாய்மாமன் வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். சனி பலமிழந்திருந்தால் விபத்தில் சிக்க வேண்டியிருக்கும். திருமணதடை வீண் பழி, வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும். எடுக்கும் காரியங்களில் தோல்வி உண்டாகும்.

புதன் பகவானுக்கு பரிகாரங்கள்

பெருமாளுக்கு புதன் கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்வது, சதர்சன ஹோமம் செய்வது, சதர்சன எந்திரம் வைத்து வழிபடுவது பச்சை பயிறு, பச்சை நிற ஆடை,நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை படிக்கும் பிள்ளைகளுக்கு தானம் அளிப்பது நல்லது. மரகதக்கல் மோதிரத்தையும் அணியலாம். மதுரை மீனாட்சி அம்மன் புதன் தலமாக போற்றப்படுகிறது. வாய்ப்பு உள்ளவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். அதே போல திருவெண்காடு புதன் தலத்திற்கு சென்று வழிபட்டு வந்தால் அறிவும் ஆற்றலும் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+