விருச்சிகம் ராசிக்கு சொத்துகளைக் குவிக்கும் யோகம்.. பேச்சிலும், வாகனத்திலும் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

வைகாசி மாத ராசி பலன்: சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

you-can-find-out-the-benefits-that-viruchigam-rasi-people-will-get-in-the-month-of-vaikasi

தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் கண்டிப்பாக பார்வதி தேவியை வழிபாடு செய்வது அனுகூலத்தை, நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். இடதுபக்க தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அம்மே நாராயணா என்ற தேவியின் பாடலை உச்சரிப்பதால் தேவியின் பரிபூரண கடாட்சம் ஏற்படும்.

குடும்பத்தில் துணையின் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நலனில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. சுபவிரைய பிராப்தம் கண்டிப்பாக ஏற்படுத்தும். அசையும், அசையா பொருள் சேர்க்கை ஆனந்தத்தை ஏற்படுத்தும்.

எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படுத்தும். ரத்த பந்த உறவுகளுக்கும் உங்களுக்கும் இருந்த இடைவெளிகள் குறைவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள். தொழில் நிமித்தமாக பயணங்கள் மிகப்பெரிய ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தித் தரும். புதிய முதலீடுகளுக்கு குறைவிருக்காது. தனிப்பட்ட முறையில் பெரிய தொழில்களை தைரியமாக எடுத்துச் செய்வீர்கள்.

எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகொடுக்கக் கூடிய அனுகூலம் ஏற்படும். சத்ருக்களின் வீரியம் அதிகரித்துள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். தர்க்கம் செய்வதை குடும்பத்திலும், வெளியிடத்திலும் தவிர்ப்பது நல்லது. பயணங்களில், வாகனங்களில் அதீத வேகம், விதிமுறைகளை மீறுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் கடும் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். வீண் வாதத்தை தவிர்த்து, வாகனங்களில் கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+