தீராத கடன் பிரச்னையா?.. செல்வம் பெருக வேண்டுமா?.. உங்க வீட்டில் இதை மட்டும் பண்ணுங்க..சூப்பர் டிப்ஸ்
சென்னை: கடனற்ற வாழ்க்கை என்பதுதான் அனைவருடைய கனவாகவும் இருக்கும். அந்த வகையில், கடன் பிரச்னை தீர்வதற்கும், செல்வ செழிப்புடன் வாழ்வதற்கும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில வாஸ்து குறிப்புகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஒவ்வொருவருக்குமே செல்வத்தை சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் தான் கடினமாக உழைத்துக் கொண்டிருப்பார்கள். சில சமயத்தில் வீடு போன்ற செல்வத்தை சேர்ப்பதற்கும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளாலும் சிலர் கடனாளியாக ஆகி விடுகின்றனர். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாங்கிய வீடு கூட சில நேரங்களில் இது தேவைதானா என்ற எண்ணத்தை பலருக்கும் ஏற்படுத்தி விடுகிறது.

சிலர் வருமானத்துக்கு மீறி கடனை வாங்கிவிட்டு நிம்மதியை இழந்திருப்பார்கள். வீடு மட்டுமல்ல நிலம், கல்வி, மருத்துவம், வாகனம் என பல கடன்களை வாங்கிவிட்டு சிக்கல்களுக்கு உள்ளாகி விடுகின்றனர். பல நேரத்தில் வாங்கிய கடனை சரியாக செலுத்த முடியாமல் அவமானத்தை சந்திக்கும் நிலையும் ஏற்படும்.
இப்படி கடன் பிரச்னைகளால் புலம்பும் மனிதர்களில் நீங்களும் ஒருவராக இருப்பின் கவலையே வேண்டாம். வீட்டுடைய அமைப்பு, திசை உள்ளிட்டவற்றைத் தாண்டி கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடவும், செல்வ வளம் பெருகவும் வீட்டில் சிறிய வாஸ்து பரிகாரங்களை செய்தாலே போதும். அபரிமிதமான பலன்கள் நமக்கு கிடைப்பதை நம்மால் உணர முடியும். அந்த வாஸ்து குறிப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
வடக்கு திசை: பொதுவாக வடக்கு திசை மகாலட்சுமியின் அம்ச திசை என்று கூறப்படுவது வழக்கம். கடனில் இருந்து விடுபட உங்கள் வீடு அல்லது கடை, அலுவலகத்தில் வடக்கு திசையில் பணப் பெட்டியை வைப்பது நல்ல பலன்களைத் தரும். இப்படி வைப்பதன் மூலமாக உங்களுடைய கடன்கள் அனைத்தையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். அதேபோல, செவ்வாய்க்கிழமை அன்று கடனை திருப்பிச் செலுத்துவது மிகவும் நல்லது. இதனால், நீங்கள் வாங்கிய கடன் கணிசமாக குறைவதை நீங்களே உணர்வீர்கள். முடிந்தளவு செவ்வாய்க்கிழமை கடனை அடைக்க முயற்சி செய்யுங்கள்.
வீட்டில் குபேரன்: வீட்டில் லட்சுமி சிலை மற்றும் குபேரனின் சிலையை வைத்து வழிபடுவது மிகவும் நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக, வீடு, அலுவலகம் அல்லது கடைகளின் வடக்கு திசையில் இந்த சிலைகளை வைத்து தினமும் வழிபட்டு வந்தால் நற்பலன்கள் கிடைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த வழிபாட்டால் பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்.
வாஸ்து: வீட்டில் உள்ள திசை பிரச்னைகளாலும் கடன்கள் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கும். சமையலறை, தூங்கும் அறை போன்ற அறைகளை வாஸ்துப்படி அமைப்பது நல்லது.
அரச மர வழிபாடு: தீராத கடன் பிரச்னைகளில் இருப்பவர்களுக்கு அரச மர வழிபாடு நல்ல பலன்களை அள்ளித் தரும். சனிக்கிழமை தோறும் காலை, மாலை வேளைகளில் அரசமரத்தின் அடியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது. நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றி காலையில் மட்டும் சுற்றி வழிபாடு செய்து வருவது உங்களை கடன் பிரச்னைகளில் இருந்து விடுதலை அடையச் செய்யும். படிப்படியாக உங்கள் கடன்கள் அனைத்தும் குறையும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications