பண மழையில் நனையும் மிதுன ராசி.. அதிர்ஷ்டம், யோகம் கொட்டும்.. ஆரோக்கியத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 14 ஆம் தேதி

you-can-learn-about-the-benefits-remedies-and-divine-worship-that-mithunam-will-receive-this-year
விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் வேலையில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருப்பீர்கள். வேலை, தொழில், அந்தஸ்து, வியாபாரம், உத்தியோகம் ஆகியவற்றுக்கு காரகனே சனி தான். அந்த சனி மிதுன ராசிக்காரர்களின் 10 ஆம் இடத்தில் தற்போது அமர்ந்திருக்கிறார். தன் வீட்டிலேயே சனி தற்போது இருப்பதால் அமோகமான மேன்மையைக் கொடுக்கப் போகிறார்.

தொழில்

மிதுன ராசியினருக்கு தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். தொழில் நன்றாக இருப்பதால் பிசியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். வேலை வேலை என்று அடுத்த ஒரு வருடத்துக்கு சுற்றிக் கொண்டிருக்கும் சூழல் உண்டாகும். குரு ராசி, லக்கினத்தில் அமர்ந்திருப்பதால் ஒரு விஷயத்தை இரண்டு, மூன்று முறையாவது அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இலக்கை நிர்ணயித்து காரியத்தை முடிப்பீர்கள்.

பாக்கியம்

ராகு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமருகிறார். நேரடியாக குருவின் பார்வை ராகு மீது விழுவதால் தைரியம், தன்னம்பிக்கை, முன்னோர்கள் சம்பந்தப்பட்ட, சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடியம். ஜீவ சமாதி அடைந்திருக்கக் கூடிய மகான்கள் உங்களிடம் பேசுவார். ராகு, குரு பார்வையில் இருக்கும்போது ராகவேந்திர சுவாமி பேசுவது, கனவில் தோன்றுவது உண்டாகும். அசாதாரணமான அமானுஷ்யங்கள் உண்டாகும் வாய்ப்புள்ளது.

குரு பார்வை

குரு பார்வை கிடைப்பதால் பெரிய ஏற்றங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாடும் செல்லும் யோகம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். காசி, கயாவுக்குச் செல்லும் வாய்ப்புள்ளது. மிகப்பெரிய கோயில் கும்பாபிஷேகம் உங்கள் தலைமையில் நடக்கும். குலதெய்வ கோயில், வழக்கால் கட்டப்பட்ட கோயில்களில் கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்புள்ளது. அதனால் உங்களுக்கு பெரிய பொறுப்பு, அதிர்ஷ்டம் உண்டாகும்.

பஞ்சம ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்களுடைய தாத்தாவே வந்து குழந்தையாகப் பிறப்பார். உங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பீர்கள். கடன்களை எல்லாம் அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். கடன் தீரும். அதே சமயத்தில் கடன் தேவைப்படுபவர்களுக்கு கடன் கிடைக்கும்.

குரு 7 ஆம் பார்வையாக பார்ப்பால் இரண்டாம் குழந்தைக்கு காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியில் விவாகரத்து ஆனவர்களுக்கு மறுமணம் உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரும் வாய்ப்புள்ளது.

வழிபாடு

திருக்கோவிலூர் அருகே உள்ள ரகோத்ம சுவாமிகள் பிருந்தாவனத்துக்கு வியாழக்கிழமை சென்று தரிசனம் செய்வது மிகப்பெரிய பாவங்களில் இருந்தும் விமோர்சனம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மதிப்பெண்

மிதுன ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தின் அடிப்படையில் 95 சதவீதமும், பொருளாதாரத்தில் அடிப்படையில் 90 சதவீதம் நன்மை உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+