ஸ்டார்ட் பண்ணிட்டாங்களே.. சென்னையில் 1000 இடங்கள் அப்படியே மாறுது.. வாகன ஓட்டிகள் நோட் பண்ணுங்க
சென்னை: சென்னையில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. மோசமான நிலையில் உள்ள சாலைகளை மில்லிங் செய்து அதை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
சென்னையில் தொடர் மழை வெள்ளம் முடிந்து உள்ள நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உடனுக்குடன் குழிகள் மூடப்படுகின்றன.

தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் சென்னையில் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது, சென்னையில் செய்வது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தையும் ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது
சென்னை சாலை மாற்றம்:
கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சென்னையில் சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கான டெண்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் விடப்பட்டது. நேற்று இரவில் இருந்து இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
1,000 மெயின் மற்றும் உட்புற சாலைகள் அடுத்த வாரத்திற்குள் சரி செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முழுவதாக மோசம் அடைந்த சாலைகள் சரி செய்யப்படும். அவை பேட்ச் செய்யப்படாமல் மொத்தமாக சாலைகள் மீண்டும் போடப்படும். அதுவே பள்ளங்கள் மட்டும் இருந்தால் அவை பேட்ச் செய்யப்படும். ஒரு பள்ளத்தை சரிசெய்ய சுமார் 20 நிமிடங்கள் ஆகும். இரவு நேரங்களில் இதற்கான பணிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சாலைகள் சீர்திருத்தம்:
பல சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய ஜெட் பேட்ச் இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 7 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. இந்த இயந்திரங்கள் அகமதாபாத்தில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு, சாலைகளில் உள்ள குழிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும்.
மாற்றப்படும் சாலைகள்:
ராயபுரம், தொண்டியார்பேட்டை, பெருங்குடி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய சாலைகளான பர்னபி ரோடு, புரசைவாக்கம் மெயின் ரோடு, பேசின் பிரிட்ஜ் ரோடு, அண்ணாநகரின் சாந்தி காலனி ரோடு உள்ளிட்ட சாலைகள் முதல் கட்டமாக சரி செய்யப்படும். இந்த சாலைகளை சரிசெய்வது போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உதவும்.
கண்டறியப்பட்ட 1,000 மோசமான சாலைகளில் 300 வடசென்னையில் உள்ளன. அடுத்த மழை முடிந்ததும் சாலைகள் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாற்றப்படும் சென்னை சாலைகள்:
பிப்ரவரிக்குள், சேதமடைந்த சாலைகளை முழுவதுமாக மாற்றுவோம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது . பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, மேட்லி ரோடு மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் அவற்றை சரிசெய்ய வேண்டும்.
சுவர் விரிசல்களை நிரப்ப, சிமென்ட் அடிப்படையிலான ரசாயனங்களை உட்செலுத்தும் செயல்முறையான கிரவுட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது சுரங்கப்பாதையில் தண்ணீர் நுழைவதைத் தடுக்கும். கே.எம்.சி.எச்.க்கு வெளியே உள்ள ஈ.வி.ஆர்.பெரியார் சாலை மற்றும் கோயம்பேடு சாலை சந்திப்பு போன்ற முக்கிய சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் முதல் கட்டமாக அங்கே பணிகள் நடக்கும்.
கே.எம்.சி.எச்.க்கு வெளியே உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், இரவு நேரங்களில் மழை பெய்யும் போது, சாலை பள்ளங்கள் தெரிவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்படுகின்றனர். இதனால் அங்கேயும் விரைவில் சாலை சரி செய்யப்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications