தமிழ்நாட்டிற்குள் வரப்போகும்.. மிக நீண்ட எக்ஸ்பிரஸ் வே.. இணைக்கப்படும் 2 பெரிய நகரங்கள்.. சூப்பர்
சென்னை: சென்னை டூ திருச்சி இடையிலான 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்க வில்லை. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு சென்றுள்ள நிலையில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டம் தொடர்பான விளக்கம்:
1. சென்னை திருச்சி இடையிலான பயணத்தை 5-6 மணி நேரத்தில் இருந்து 2.30-3 மணி நேரமாக குறைக்கும். அதிகபட்சம் 4 மணி நேரத்தில் சென்று விடலாம்.

2. சென்னை-திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தாம்பரத்தில் இருந்து திருச்சி அல்லது தாம்பரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோயிலில் இருந்து கிரீன்ஃபீல்டு விரைவுச் சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது.
3. 6 வழி சாலையாக அமைக்கப்பட உள்ள இந்த நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலையில் கட்டப்பட்டு வரும் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டில் (CPRR) தொடங்கி திருச்சி வரை செல்லும்.
4. இது சென்னை துறைமுகத்தையும் இணைக்கும். இந்த சாலை செயல்பாட்டுக்கு வந்ததும், தூத்துக்குடி, மதுரை மற்றும் பிற தென் மாவட்டங்களில் இருந்து வணிகப் பொருட்கள் சென்னை நகருக்குள் நுழையாமல் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு வழியாக எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்படலாம்.
6. இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் பிற அம்சங்களை மதிப்பிடுவதற்கு ஆலோசகர்களுடன் பல சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தற்போது இறுதி செய்யப்பட்டு வருகிறது.
7. கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலையின் தொடக்கப் புள்ளி தீர்மானிக்கப்பட்ட நிலையில், முடிவுப் புள்ளி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அது திருச்சி அல்லது அதற்கு அப்பால் இருக்கலாம் என்று ஆலோசனை செய்யப்படுகிறது.
பயணமே மாறும்: ஜிஎஸ்டி சாலையில் அதிகரித்து வரும் வாகன நெரிசல், எதிர்கால வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வணிக மற்றும் பிற பொருட்களின் போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய விரைவுச் சாலை திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, தினமும் சுமார் 1.6 லட்சம் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக செல்கின்றன.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலும் வளர்ச்சிப் பணிகளை தொடங்கும் முன், நெரிசலைக் குறைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 7 இடங்களில் கட்டப்பட்டு வரும் பாலங்கள், விபத்து கரும்புள்ளிகளை அகற்றும் நோக்கில், செங்கல்பட்டு மற்றும் ஆத்தூர் இடையே வாகனங்களுக்கு யு-டர்ன் வழங்குவதற்காக நான்கு சுரங்கப்பாதைகள் அமைக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம். 132.87 கிமீ ஆறு வழி அணுகல் கட்டுப்பாட்டுச் சாலை ரூ.15,626 கோடியில் கட்டப்படுகிறது.
டிபிஆர் தயாரிப்பு: தேசிய நெடுஞ்சாலைகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் அருமருந்தாக சென்னை - திருச்சி எக்ஸ்பிரஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டிபிஆர் தயாரிக்கும் பணிகள் தொடங்க உள்ளதாம்.
சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் வே வழித்தட கட்டுமானம் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், பாரத்மாலா பரியோஜனா இரண்டாம் கட்டத்தின் கீழ், சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் இரண்டாவது எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை உருவாக்க தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சமீபத்தில் நாடு முழுவதும் சுமார் 6,747 கிமீ தூரத்திற்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ்வேகள், பொருளாதார வழித்தடங்கள் மற்றும் இடை-வழிச்சாலைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்காக ஆலோசகர்களை பணிக்கு அமர்த்தி உள்ளது.
அதில் தமிழ்நாட்டு திட்டங்களும் அடங்கும். இதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் அளவு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. சென்னை டூ திருச்சி 4 மணி நேரத்தில் செல்லும் விதமாக இந்த எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்படும்.












Click it and Unblock the Notifications