சென்னையில் 375 இடங்களில் 3வது கண்... வாகன ஓட்டிகளுக்கு பெரிய ஆப்பு.. ரொம்ப கவனமா இருங்க பாஸ்!
சென்னை: தவறான முறையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க, சென்னை நகரம் முழுவதும் 375 தானியங்கி நம்பர் பிளேட் ரீடிங் கேமராக்களை காவல்துறை நிறுவும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் கூட சோதனை செய்யும் வகையில் கேமராக்களை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி OMR, மவுண்ட்-பூந்தமல்லி சாலை, பூந்தமல்லி உயர் சாலை, ECR மற்றும் GST சாலைகள் போன்ற முக்கிய சாலைகளில் 75 இரவு-பார்வை கேமராக்கள் உள்ளன. மீதமுள்ள 300 கேமராக்கள் முக்கிய சந்திப்புகள் மற்றும் முக்கிய சாலைப் பிரிவுகளில் தவறான பக்க விதிமீறல்களைக் கண்காணிக்க வைக்கப்படும். மேலும் குற்றவாளிகளை திறம்பட பிடிக்க போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிரே நிலைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேமராக்கள் வருகிறது: இது போக சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களை பிடிக்க சிக்னலுக்கு சிக்னல் மூன்று கால்கள் கொண்ட டிரைபாட் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதை வைத்து விதி மீறல் செய்யும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. உதாரணமாக நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். போலீசால் உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர் போட்டோ எடுத்தால் போதும் அபராதம் உங்களை தேடி வருகிறது.
எப்படி நடக்கும்?: பெங்களூர் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் சென்னையில் இதில் கூடுதல் ஒரு வழிமுறையும் சேர்க்கப்பட்டு உள்ளது. சென்னையில் போலீஸ் மட்டுமின்றி மக்களும் போட்டோ எடுக்க முடியும். மக்களும் போட்டோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய முடியும். அதில் இருக்கும் நம்பரை பார்த்து.. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் சென்றால்.. அந்த நம்பருக்கு தானாக அபராதம் அனுப்பப்படும். இந்த நடைமுறையை கடந்த சில நாட்களாக போலீசார் பின்பற்றி வருகின்றனர்.
போக்குவரத்து விதிகள்; இந்த நிலையில்தான் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய பல்லாயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பல்வேறு விதிகளான வேகமாக ஓட்டுவது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுவது, டிராபிக் லைட்டுகளை பின்பற்றாமல் இருப்பது, கோடுகளை மதிக்காமல் நிற்பது, ரேஷ் டிரைவிங் செய்வது போன்ற காரணங்கள் காரணமாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி சென்னையில் விதிகளை மீறிய 12600 பேரின் லைசன்ஸ் முடக்கப்பட்டு உள்ளது. இதில் 50 சதவிகிதம் பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேமரா வந்துவிட்டது: இது போக சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களை பிடிக்க சிக்னலுக்கு சிக்னல் மூன்று கால்கள் கொண்ட டிரைபாட் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதை வைத்து விதி மீறல் செய்யும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதன் மூலம் நேரடியாக விதி மீறல் செய்பவர்களை போலீசார் எளிதாக படம் பிடிக்க முடியும். முதல் கட்டமாக 20 சிக்னல்கள் இந்த கேமராக்களை கொண்டு உள்ளன. இது வரும் நாட்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications