இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க.. சென்னையில் ரத்து செய்யப்பட்ட பல ஆயிரம் பேரின் லைசன்ஸ்.. என்னாச்சு?
சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு கட்டமாக விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
சென்னையில் கடந்த சில மாதங்களில் மட்டும் 1,82,375 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்துள்ளனர். இது தொடர்பாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

சென்னை ட்ராபிக் போலீசார் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் மூன்று மாதம் சிறை என்று எச்சரித்துள்ளனர். இதற்காக முக்கியமான சோதனை ஒன்றை சாலைகளில் செய்ய தொடங்கி உள்ளனர். 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை (Registration) நிறுத்தி வைப்போம் என்று தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைப்போம் என்று தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் கடந்த சில மாதங்களில் மட்டும் 1,82,375 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்துள்ளனர். இது தொடர்பாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டு உள்ளார். மது குடித்து ஓட்டியது, விபத்து ஏற்படுத்தும் படி ஓட்டியது என்று பல காரணங்களுக்காக இந்த உரிமங்களை ரத்து செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில், 8- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்? 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி.
12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும். கவனம் தேவை பெற்றோர்களே என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து விதி: தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
விதி மீறல்: டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
முக்கியமாக சென்னையில் அதிகம் இப்படி நடக்கிறது. அதோடு சிலர் சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களை கண்காணிக்க, அவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய வழிமுறை ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.
புதிய விதி; இந்த நிலையில்தான் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், வண்ண விளக்குகளை பொருத்தி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வாகனங்களில் பல வண்ண விளக்குகள் பொருத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல வண்ண ஒளி விளக்குகள் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கவனத்தை சிதறடிப்பதால் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications