பெரிய ஆப்பு.. சாட்டிலைட் டோல் கேட் இப்போதைக்கு கிடையாது.. ஆனால் வருது.. வேறு எதிர்பார்க்காத சிக்கல்
டெல்லி: நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சாட்டிலைட் அடிப்படையிலான சுங்கச்சாவடி முறை வரும் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வந்தன. ஆனால் இந்த திட்டம் அரசிடம் உள்ளது.. ஆனால் மே மாதம் இந்த திட்டம் செயலுக்கு வராது.. அதற்கு இன்னும் காலம் எடுக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக வேறு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை இயக்க, அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) இருப்பது அவசியம். அரசாங்கம் திட்டமிட்டுள்ளபடி, இது மூன்றாம் தலைமுறை (3ஜி) மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய மைக்ரோ-கண்ட்ரோலரின் உபகரணங்களின் மூலமாக இயங்கும்.

எப்படி செயல்படும்?
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வாகனங்களின் ஜி.பி.எஸ் ரெக்கார்டுகளை அரசு பெற்று அவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடியும். எனவே, அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் வழித்தடத்தையும், அவர்கள் எடுக்கும் சுங்கச்சாவடிகள் ரூட் என்ன என்பதையும் அரசு தெரிந்து கொள்ளும். அவர்கள் எத்தனை டோல் கேட்களைக் கடந்து செல்கிறார்கள் என்பதைச் சரிபார்த்து மொத்த டோல் வரியைக் கணக்கிடலாம். அதாவது வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் செய்துள்ளது என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரடியாக டோல் கட்டணம் வசூலிக்கப்படும்.
புதிய முறை
நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார். ஆனால் அப்போது செயல்படுத்தப்படவில்லை.
தற்போது பாஸ்ட் டாக் கட்டண முறை உள்ளது. இந்த சாட்டிலைட் முறை வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும். அதனால் இந்த முறையை இப்போதைக்கு அரசு கொண்டு வராது என்று அறிவித்துள்ளது. அதனால் மே மாதம் இந்த திட்டம் செயலுக்கு வராது.. அதற்கு இன்னும் காலம் எடுக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மே 1-ம் தேதி முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் முறையை நடைமுறைப்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) எந்த முடிவையும் செய்யவில்லை என்று MRTH அறிக்கையில் தெரிவித்து உள்ளது. அதற்கு பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட டோல் பிளாசாவில் ஒருங்கிணைக்கப்பட்ட தானியங்கி நம்பர் பிளேட் கண்காணிப்பு (ANPR) கேமராக்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அமைச்சகம் அறிவித்து உள்ளது. தடையற்ற வாகன இயக்கத்தை மேம்படுத்துவதற்கும், சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைப்பதற்கும் இந்த தடையற்ற சுங்கவரி அணுகுமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.
தானியங்கி நம்பர் பிளேட் கண்காணிப்பு (ANPR) கேமராக்களை வைத்து உங்கள் நம்பர் பிளேட் கண்காணிக்கப்படும்.. அதன் வழியாக உங்களின் பாஸ்ட் டாக் கண்டுபிடிக்கப்பட்டு அதில் இருந்து கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ANPR-FASTag அமைப்பு வாகன நம்பர் பிளேட்டுகளை படிக்கும் திறன் கொண்ட உயர் செயல்திறன் கொண்ட கேமராக்களை கொண்டது ஆகும். தற்போதுள்ள ரேடியோ-அதிர்வெண் அடையாள (RFID) FASTag அட்டைகளையும் இது சேர்ந்து படிக்கும் திறன் கொண்டது. இதனால் உங்களின் பாஸ்ட் டாக் கண்டுபிடிக்கப்பட்டு அதில் இருந்து கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைப்பதற்கு இந்த தடையற்ற சுங்கவரி அணுகுமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.
சுங்கச்சாவடி கட்டணம்
சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏஜென்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் 5,248 கிமீ தேசிய நெடுஞ்சாலைகளை நிறைவு செய்துள்ளன அல்லது விரிவுபடுத்தியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 4,766 கிமீ ஆகும். சுமார் 12,000 கி.மீ.களை நிர்மாணித்து விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் இலக்கு இருந்தபோதிலும், இந்த நிதியாண்டில் இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த இலக்கை அடைவது வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.,
புதிய திட்டங்களுக்கான ஏலத்தின் வேகம் முந்தைய ஆண்டை விட கணிசமாக குறைந்துள்ளது. ஏஜென்சிகள் 5,382 கி.மீ பணிக்கு ஏலம் எடுத்திருந்த நிலையில், இந்த ஆண்டு அது 2,815 கி.மீ.யை எட்டவில்லை. பாரத்மாலா கட்டம்-1 அல்லது மாற்று திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது, திட்ட ஏலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது உட்பட பல காரணங்களால் சாலைகள் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு திட்டங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 2024-25 நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படும். இனி வரும் ஆண்டுகளில் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் பாரத்மாலா திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களைத் தொடங்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் சாலை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. பாரத் மாலா முதன்மைத் திட்டத்தின் கீழ் 8,000 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் விரைவில் போடப்படும் என்று கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications