களமிறக்கப்பட்ட ஃபோர்ஸ்.. பெங்களூர் சென்னை விரைவுச்சாலையில் போறீங்களா? வாகன ஓட்டிகளுக்கு சர்ப்ரைஸ்
பெங்களூர்: பெங்களூர் சென்னை இடையே அமைக்கப்படும் விரைவுச்சாலையில் பல ஆயிரம் பேர் ஏற்கனவே பயணம் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் இங்கே பாதுகாப்புகளை தீவிரப்படுத்த நெடுஞ்சாலை பிரிவு காவல்துறையினர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு பகுதியில் தமிழ்நாடு காவல்துறையினர் ரோந்து பணிகளை அதிகரித்துள்ளனர். இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வரும் நிலையில்தான் பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பெங்களூர் சென்னை இடையே அமைக்கப்படும் விரைவுச்சாலையை பெங்களூரு-கோலார் நெடுஞ்சாலையுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 18-கிமீ தொலைவிற்கு இந்த சாலை அமைப்பதை NHAI பரிசீலித்து வருகிறது. இந்த விரைவுச்சாலையில் மாலூர், பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களாவில் வெளியேறும் கிளை சாலைகள் உள்ளன. முழு நீளமும் இன்னும் முடிவடையாததால், டோல் சார்பாக எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. இந்த விரைவுச் சாலையை இப்போது உள்ளூர்வாசிகள் மற்றும் நீண்ட தூரம் செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.
சாலை விபரம்
இந்த விரைவுச்சாலையானது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது மற்றும் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை இடையே இப்போது 6 மணி நேரத்திற்கும் மேலாக உள்ள பயண நேரத்தை மூன்று மணி நேரத்திற்குள் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நான்கு வழிச்சாலையின் கட்டுமானம் கர்நாடகாவில் மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
தொகுப்பு 1: ஹோஸ்கோட் மற்றும் மாலூருக்கு இடையே, 27.1 கி.மீ.
தொகுப்பு 2: மாலூர் மற்றும் பங்கார்பேட்டை இடையே 27.1 கி.மீ
தொகுப்பு 3: பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களா இடையே 17.5 கி.மீ
திறக்கப்பட்ட சாலை - பாதுகாப்பு அதிகரிப்பு
பெங்களூர் -சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் தமிழ்நாடு மற்றும் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச பகுதி இன்னும் திறக்கப்படவில்லை. இந்த சாலையில் தற்போது வேகத்தை கண்காணிக்கும் ஏஐ சென்சார்கள், கேமராக்கள் உள்ளன. இவை கடந்த சில நாட்களாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இவை விடாமல் அங்கே செல்லும் வாகனங்களை கண்காணிக்கும். சாலையில் பயணம் செய்பவர்களை விடாமல் இந்த கேமரா கண்காணிக்கும்.
காரில் வேகமாக செல்பவர்களால் அடிக்கடி இந்த சாலையில் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட தொடங்கி உள்ளன. கடந்த 3 வாரத்தில் மட்டும் 3 விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. இதில் 7 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த விபத்துகளுக்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளன. சாலை புதியது என்பதால் பலரும் காட்டுத்தனமாக.. வேகமாக ஓட்டுகிறார்கள். அங்கே பைக் அனுமதி இல்லை என்றாலும் டோல் இல்லை என்பதால் பலரும் பைக்கில் செல்கின்றனர். அங்கே நடந்த 3 விபத்தில் 2 பைக் சம்பந்தப்பட்டது ஆகும்.
சாலை பணிகள் இன்னும் சில இடங்களில் முடியவில்லை
அங்கே இப்போது பெரிய அளவில் விளக்குகள் இல்லை. இங்கே இரவு நேரம் பயணம் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த சாலை பகுதியில் போதிய விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. ஒரு பக்கம் பணிகள் வேறு நடக்கின்றன. அதேபோல் பொட்டல் காடாக இருப்பதால் இரவு நேரத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தற்போது கர்நாடக பகுதி மக்களால் இது நீண்ட டிரைவ்களுக்கும் ஜாலி ரைடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விபத்துகள் அதிக அளவில் அங்கே ஏற்பட தொடங்கி உள்ளன.
ஆந்திரப் பிரதேசம் பகுதியில் இன்னும் முடிக்கப்படாத 260 கிமீ விரைவுச் சாலை ஆகஸ்ட் 2025 க்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 71 கிலோமீட்டர் நீளமுள்ள கர்நாடகப் பகுதி திறந்திருப்பதால், விரைவுச் சாலையைச் சுற்றி வசிக்கும் உள்ளூர் மக்களும், சாலை முடியும் வரை நீண்ட தூரம் சென்று திரும்பி வந்தவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர். ஹோஸ்கோட் அருகே ஜின்னகெரா கிராஸில் உள்ள ஒரு கோயில் காரணமாக இங்கே பணிகள் தாமதமாக நடந்தது. கோவில் இடமாற்றம் செய்யப்பட்டு, 400 மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி தற்போது முடிவடைந்தது. இதையடுத்து சாலை மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. சில சிறிய பணிகளைத் தவிர மற்ற பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது .
-
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.. எல்லாமே அடுத்தடுத்து உயருகிறதே.. இனி கட்டுப்படுத்தவே முடியாது! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications