சிங்கப்பூர் போல மாறப்போகும் "சிங்கபெருமாள் கோயில்".. 10 வழி சாலை வருது.. இந்த போட்டோவை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPPR) வேகமாக கட்டப்பட்டு வருகிறது. இது நகரின் மிகவும் மதிப்புமிக்க உள்கட்டமைப்பு வளர்ச்சிகளில் ஒன்றானதாக பார்க்கப்படுகிறது. பல கோடி ரூபாய் செலவில், 2 சர்வீஸ் சாலைகள் கொண்ட 10 வழிச் சாலையாக இது அமைக்கப்படுகிறது.

நகர போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, எண்ணூர் மற்றும் மகாபலிபுரம் வர்த்தக மையங்களை நேரடியாக இணைக்கும் வகையில் இந்த சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

automobile chennai

சென்னையின் நான்காவது பெரிய ரிங் ரோடாக அமைக்கப்பட்டுள்ள சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு, சிங்கபெருமாள் கோயில், திருவள்ளூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் மொத்தம் 133 கி.மீ தூரம் கொண்ட சாலை ஆகும். இத்திட்டம் 2026 டிசம்பரில் நிறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தின் முதல் இரண்டு கட்டம் வரும் ஜனவரி மாதம் நிறைவு பெறும். மொத்தம் 4 கட்டங்களாக சாலை அமைக்கப்பட உள்ளது.

திட்டத்தின் நன்மைகள்:

சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதன் மூலமும், போக்குவரத்து விபத்துகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், பயண நேரத்தைக் குறைப்பதன் மூலமும் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும். முக்கியமாக துறைமுகத்திற்க்கு செல்லும் சரக்கு வாகனங்கள் எளிதாக சிட்டி உள்ளே வராமல் போக முடியும். சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு கட்டி முடிக்கப்பட்டால், மகாபலிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பயண நேரம் வெறும் 40 நிமிடங்களாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

automobile chennai

இது சிங்கபெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவயல் மற்றும் காட்டுப்பள்ளி போன்ற புறநகர் பகுதிகளில் உள்கட்டமைப்பு விரிவாக்கங்களை அதிகரிக்கும். இதனால் அங்கே சிட்டி வேகமாக வளரும். புதிய குடியிருப்பு மற்றும் வணிக ரியல் எஸ்டேட் மேம்பாடுகள், மேம்பாலம் கட்டுமானம் மற்றும் புதிய நிறுவனங்கள் ஆகியவை இங்கே அமைக்கப்படும். இது மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். முக்கியமாக புதிய தொழிற்சாலைகள் இங்கே அமைக்கப்படும்.

புகைப்படம் வெளியீடு: இந்த மிகப்பெரிய திட்டத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதன் சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC) போன்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு ஏற்கனவே நகரின் முக்கிய வளர்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

automobile chennai

சிங்கபெருமாள் கோயிலுக்கு எப்படி பலன் கிடைக்கும்:

இந்த வளர்ச்சியின் முக்கியப் பயனாளிகளில் ஒன்று சிங்கப்பெருமாள் கோயில் பகுதிதான். ஏற்கனவே வளர்ந்து வரும் பகுதியாக இருக்கும் சிங்கப்பெருமாள் கோயில்.. சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு கொண்டு வரப்பட்ட பின் இன்னும் வளரும். இந்த வட்டாரம் குறிப்பிடத்தக்க ரியல் எஸ்டேட் சந்தையாக மாற போகிறது.

பல டெவலப்பர்கள் அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள் மற்றும் திட்டமிடப்பட்ட மேம்பாடுகள் உட்பட பரந்த அளவிலான குடியிருப்பு திட்டங்களை ஏற்கனவே இங்கே உருவாக்கி வருகின்றனர். மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ஸோஹோ, ஃபோர்டு மற்றும் எஸ்ஆர்எம் இன்ஸ்டிட்யூட் போன்ற முக்கிய அடையாளங்கள் இங்கே இருப்பதால், சிங்கபெருமாள் கோயில் வணிக ரியல் எஸ்டேட் வளர்ச்சியை சந்திக்கும்.

சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு, சிங்கபெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகே செல்லும்.. இது ஜிஎஸ்டி சாலையுடன் இணைக்கப்படும். இது ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஐடி மையங்களையும்.. ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ஆட்டோ-ஹப்பையும் ஒன்றிணைக்க உதவுகிறது. இந்தியாவிலேயே ஆட்டோ ஹப் - ஐடி ஹப் இணையும் முக்கியமான இடமாக இது உருவெடுக்கும். ரியல் எஸ்டேட்டும் புதிய உச்சம் அடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+