சென்னையில் ஒரே அழுத்து.. மதுரைக்கு சல்லுன்னு போகலாம்.. தமிழ்நாட்டில் வரும் பிரம்மாண்ட எக்ஸ்பிரஸ்வே
சென்னை: தமிழ்நாட்டில் பெரிய அளவில் எக்ஸ்பிரஸ்வே இல்லை என்று புகார்கள் வைக்கப்படும் நிலையில் புதிய எக்ஸ்பிரஸ்வே தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுரை - சென்னை இடையே புதிய எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் இன்னும் எக்ஸ்பிரஸ்வே கட்டுமானம் தொடங்கவில்லை. ஜூலை 2024 நிலவரப்படி, 5,173 கிமீ (3,214.4 மைல்) நீளம் கொண்ட 48 எக்ஸ்பிரஸ்வேக்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் 8,772 கிமீ கட்டுமானத்தில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 1,021 கிமீ அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டுமே இருந்தன.

உத்தரப்பிரதேசம் 1,396 கிமீ (867 மைல்) 9 எக்ஸ்பிரஸ்வே சாலைகள் உள்ளன.
மகாராஷ்டிரா 793.4 கிமீ (493.0 மைல்) 6 எக்ஸ்பிரஸ்வே சாலைகள் உள்ளன.
ராஜஸ்தான் 757 கிமீ (470 மைல்) 3 எக்ஸ்பிரஸ்வே சாலைகள் உள்ளன.
ஹரியானா 609 கிமீ (378 மைல்) 7 எக்ஸ்பிரஸ்வே சாலைகள் உள்ளன.
மத்தியப் பிரதேசம் 244 கிமீ (152 மைல்) எக்ஸ்பிரஸ்வே சாலைகள் உள்ளன.
சத்தீஸ்கர் 191 கிமீ (119 மைல்) 2 எக்ஸ்பிரஸ்வே சாலைகள் உள்ளன.
கர்நாடகா 171 கிமீ (106 மைல்) 5 எக்ஸ்பிரஸ்வே சாலைகள் உள்ளன.
வடஇந்தியா: தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன. வடஇந்தியாவில் இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ்வே சாலைகள் தமிழ்நாட்டில் கட்டப்படவில்லை.
தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ்வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ்வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
சூப்பர் அறிவிப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் பெரிய அளவில் எக்ஸ்பிரஸ்வே இல்லை என்று புகார்கள் வைக்கப்படும் நிலையில் புதிய எக்ஸ்பிரஸ்வே தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுரை - சென்னை இடையே புதிய எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெரிசலைக் குறைக்கும் முயற்சியில், சென்னை, திருச்சி மற்றும் மதுரை இடையே கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலையை ₹26,500 கோடி மதிப்பீட்டில் NHAI அமைக்க உள்ளது. : சென்னை டூ திருச்சி இடையிலான 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இதற்கான டிபிஆர தயாரிப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளதாம்.
இது சென்னை திருச்சி இடையிலான பயணத்தை 5-6 மணி நேரத்தில் இருந்து 2.30-3 மணி நேரமாக குறைக்கும். அதிகபட்சம் 4 மணி நேரத்தில் சென்று விடலாம். சென்னை-திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தாம்பரத்தில் இருந்து திருச்சி அல்லது தாம்பரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோயிலில் இருந்து கிரீன்ஃபீல்டு விரைவுச் சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தாம்பரத்தில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோவிலில் துவங்கி, மதுரை வரை விரைவுச்சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 470 கிமீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சாலை வந்தால் சென்னை டூ மதுரை 6 மணி நேரத்தில் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications