வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. தேசிய நெடுஞ்சாலைகளில் வரப்போகும் சூப்பர் வசதி.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் 1,000 நவீன கட்டிடங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது .
இது லாரி உள்ளிட்ட வணிக ஓட்டுநர்களுக்கு ஓய்வு எடுக்க வசதியாக கட்டப்படுகிறது. ஓட்டுனர்கள் இரவு நேரத்தில் உறங்க, சாப்பிட வசதியாக இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது. டிரக், பஸ் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு நெடுஞ்சாலைகளில் ஓய்வு வசதிகளை இந்தக் கட்டிடங்கள் வழங்கும்.

இந்த வசதிகளில் பெரும்பகுதி எண்ணெய் நிறுவனங்களால் உருவாக்கப்படும். அதாவது பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் ஓட்டுனர்களுக்கு வசதியாக அந்த நிறுவனங்கள் இந்த இடங்களை உருவாக்கும். இதில் மற்ற லாரி டிரைவர்களும் தங்கிக்கொள்ள முடியும். மீதம் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் (NHAI) உருவாக்கப்படும்.
முன்னதாக நாடு முழுக்க லாரிகளில் ஏசி கேபின் வைக்க அரசு திட்டமிட்டது. லாரிகளில் ஏசி கேபின்களை வழங்க ஒரு டிரக்கிற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை செலவாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேகம்: இது போக இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் மக்கள் செல்லும் சராசரி வேகத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது பல காரணிகள் நிர்ணயிக்கப்படும். அங்கே உள்ள தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் தாண்டி வேறு பல காரணிகள் கூட பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கும். அதில் ஒன்று சாலைகளின் தரம்.
இந்தியாவில் சமீப காலமாக அதிக அளவில் சாலைகள் போடப்படுகின்றன. முக்கியமாக எக்ஸ்பிரஸ் வே சாலைகள், நெடுஞ்சாலைகள் அதிகம் போடப்படுகின்றன. இந்த சாலைகள் பயணத்தை வேகம் ஆக்க உதவுகின்றன. இதன் மூலம் பொருளாதாரமும் உயரும்.வேகமான பயணம் என்பது வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
மத்திய அரசு திட்டம்: இந்த நிலையில்தான் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் மக்கள் செல்லும் சராசரி வேகத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வாகனங்களுக்கான வேக வரம்பு கடைசியாக ஏப்ரல் 2018 இல் புதுப்பிக்கப்பட்டது. தற்போது, நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 100 கிமீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 120 கிமீ வேகத்திலும் கார்கள் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. நகர்ப்புற சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ அனுமதிக்கப்படுகிறது. அதே சமயம் சராசரி வேகம் 70 கிமீ என்ற அளவில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ளது.
அதாவது 100 கிமீ அனுமதிக்கப்பட்டால் சாலை தரம், தடுப்புகள் காரணமாக சராசரி வேகம் 70 கிமீ ஆக உள்ளது. இதை 85 ஆக உயர்த்த.. அதாவது வாகனங்கள் சராசரியாக செல்லும் வேகத்தை அதிகரிக்க சாலைகளில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
டோல்: இது போக விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications