ஸ்கெட்ச் போட்ட சரவணனால், பிச்சிக்கிட்டு போன AVM படம் எது தெரியுமா? உடைந்து வெளிவந்த பல வருடம் உண்மை
சென்னை: "தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டை மீறி சினிமா துறை போய்விட்டால், எங்களை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.. எப்போதுமே நம்பியிருப்பவர்களை கைவிடக்கூடாது என்பதை எங்கள் அப்புச்சி கற்று தந்துள்ளார்.. அதனால்தான் ரிஸ்க் எடுக்காமல் தயாரிப்பை நிறுத்திவிட்டோம்" என்று ஏவிஎம் சரவணன் தெரிவித்ததாக, மூத்த பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Reflect Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் ராஜபாண்டியன், "தமிழ் சினிமாவின் வரலாறு எங்கு தொடங்குகிறதோ அங்கிருந்தே ஏவிஎம்-ன் வரலாறும் தொடங்குகிறது.. ஏ.வி. மெய்யப்ப செட்டியார் கலை ஆர்வத்தால் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு வந்தவர்..

AVM ஸ்டுடியோ - சக்சஸ்
1934-லேயே ஒரு ஆடியோ கம்பெனியுடன் தொடங்கினார்... தமிழகத்தின் முதலமைச்சர்கள் ஏவிஎம்மில் பணிபுரிந்தவர்கள்.. ஏவிஎம் நிறுவனத்தில் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி. ராமாராவ் என 5 முதலமைச்சர்கள் பணியாற்றிய பெருமை ஏவிஎம்-முக்கு மட்டுமே உண்டு.
தமிழ் சினிமாவின் மாற்றங்களை ஏவிஎம் நிறுவனம் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடத்தில் இருந்தது... மிக குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட பல படங்கள், பல நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன..
சிவகுமார் அறிமுகம்
சிவாஜி கணேசனின் முதல் படமான 'பராசக்தி' ஏவிஎம் படம்தான்.. கமலஹாசனுக்கு 'களத்தூர் கண்ணம்மா' முதல் படம். சிவகுமாரை அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தான். ரஜினிகாந்தை வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து பட்டிதொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது முரட்டு காளை' போன்ற ஏவிஎம் படங்கள்தான்..
சம்சாரம் அது மின்சாரம் படத்தை ஸ்டூடியோவுக்குள்ளேயே எடுத்து வெற்றி பெற்றது ஏவிஎம்.. விசு சொன்ன கதையை லேசாக மாற்றியமைத்து, அதில் படிக்காத, லோக்கலான பெண் கேரக்டரை சேர்க்கலாம், அதில் மனோரமாவை நடிக்க வைக்கலாம் என்று சொன்னதே ஏவிஎம் சரவணன்தானாம்.. அதாவது மக்களின் ரசனையை கணிக்கக்கூடியவராக இருந்தார்.
எஸ் பி முத்துராமனின் வளர்ச்சி
ஏவிஎம் ஸ்டுடியோவிலேயே உதவியாளராக இருந்து, ஏவிஎம்முக்கே படம் டைரக்ட் செய்யக்கூடிய அளவுக்கு பெரிய இயக்குனராக மாறி, ஏவிஎம்முக்கே பார்ட்னராக மாறியவர்தான் எஸ்பி முத்துராமன்.. ஏவிஎம் வளர்த்த எஸ்பிஎம் என்றே சொல்லலாம்.. எடிட்டிங் அசிஸ்டென்டில் இருந்து பெரிய டைரக்டராக எஸ்பி முத்துராமனை வளர்த்ததும் ஏவிஎம் நிறுவனம்தான்..
ஏவிஎம் சரவணன் எல்லாரிடமும் கை கட்டியே பேசுவார்.. அது அவருடைய பணிவோ அல்லது நடிப்போ கிடையாது.. தொழில் ஒழுக்கம் என்று வரும்போது முதலாளி, தொழிலாளி இருவரும் ஒன்றுதான் என்பதைக் காட்டுவதற்கான அடையாளம்தான் அது.. ரஜினி, கமல் உட்பட ஷாம் வரை அனைத்து ஹீரோக்களுமே இவரிடம்தான் சம்பளம் வாங்கினார்கள்.
அப்புச்சி கற்று தந்த பாடம்
அப்படிப்பட்ட ஏவிஎம் நிறுவனம் தன்னுடைய தயாரிப்பை நிறுத்திவிட்டது. அதற்கான காரணத்தை சரவணன் சாரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்..
அதில், "தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டை மீறி, ஹீரோக்களின் கட்டுப்பாட்டில் சினிமா போய்விட்டது.. டைரக்டர் யார்? இசை யார்? ஜோடி யார்? என்பதை எல்லாம் ஹீரோக்களே தீர்மானிக்கிறார்கள்... இது தொழில் தர்மம் இல்லை..
அதுமட்டுமல்லாமல், நடிகர்களின் சம்பளம் கோடிகளில் போய்விட்டது.. இப்படி கட்டுப்பாட்டை மீறி போய்விட்டால், எங்களை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.. எப்போதுமே நம்பியிருப்பவர்களை கைவிடக்கூடாது என்பதை எங்கள் அப்புச்சி கற்று தந்துள்ளார்.. அதனால்தான் ரிஸ்க் எடுக்காமல் தயாரிப்பை நிறுத்திவிட்டோம்" என்று விளக்கம் தந்திருந்தார்.
சூர்யா - சரவணன்
ஆக, சினிமா என்பது அத்தியாவசியம் கிடையாது.. , அது விருப்பத்தின் பேரில் பார்க்கப்படுவது. அதனால் சினிமா தொழில் உத்திரவாதம் இல்லாதது... இன்றைய சினிமா, பாப்கார்ன், பார்க்கிங் கட்டணம் போன்ற செலவுகளால் எளிய மக்களுக்கான இடமாக இல்லாமல், கார்ப்பரேட் கலாச்சாரத்துக்குள் சென்றுவிட்டது. எனினும் ஏவிஎம் சரவணன் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 175 படங்களை தயாரித்திருப்பதை கவனித்து பார்க்க வேண்டி உள்ளது.
ஏவிஎம் சரவணனுக்கு அழுது அஞ்சலி செலுத்தினார்கள் சிவகுமாரும், சூர்யாவும்.. ஒழுக்கத்தின் அடையாளமாக சிவகுமார் இன்று உள்ளார்.. சிவகுமாருக்கு அன்று முதல் படத்தை தந்தது ஏவிஎம்தான்.. அதனால்தான் அந்த நன்றி உணர்ச்சிக்காகவே மகனுக்கு சரவணன் என்று பெயரை சிவகுமார் சூட்டினார்.. சூர்யாவுக்கு சரவணன் என்ற இயற்பெயர் வைக்க காரணமே இந்த ஏவிஎம் நிறுவனம்தான்..












Click it and Unblock the Notifications