ஒழிச்சிட்டாரா பாரதிராஜா AVM ஸ்டுயோடிவை? கேமராவை கிராமத்துக்கே தூக்கி சென்ற சபாஷ்.. ஆச்சரிய உண்மை
சென்னை: அன்றைய கால கட்டத்தில் ராஜா கதைகளே பெரும்பாலும் எடுக்கப்பட்டபோது, சமூகக் கதைகளுக்கு முக்கியத்துவம் தந்து ஏவிஎம் நிறுவனம் 1946-ல் எடுத்த படம்தான் 'சபாபதி'.. இது தமிழ்நாடு முழுக்க சக்கை போடு போட்ட காமெடி படம் என்கிறார் டாக்டர் காந்தராஜ்.. ஏவிஎம் நிறுவனம், ஏவிஎம் சரவணன் பற்றி பேட்டி ஒன்றில் கூறும்போது, இதனை டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
Jeeva Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள, அரசியல் வரலாற்றுத் திரைப்பட ஆய்வாளர் டாக்டர் காந்தராஜ், "ஏவிஎம் நிறுவனம் ஆரம்பத்தில் 'சரஸ்வதி ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் இசைத்தட்டுகள் அதாவது Gramophone Records என்பார்கள்.. இந்த இசைத்தட்டுகளைதான் ஆரம்பத்தில் தயாரித்து விற்று வந்தது ஏவிஎம்.

காரைக்குடியில் கூரை கொட்டகைகளை வைத்தே ஸ்டுடியோ அமைத்து, ஏவிஎம் எடுத்த முதல் படம் 'வள்ளி'.. டிஆர் மகாலிங்கம் ஹீரோவாக நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.. அன்றைய காலத்தில் ராஜா கதைகளே பெரும்பாலும் எடுக்கப்பட்டபோது, சமூகக் கதைகளுக்கு முக்கியத்துவம் தந்து ஏவிஎம் நிறுவனம் 1946-ல் எடுத்த படம்தான் 'சபாபதி'..
ஏவிஎம்மின் சூப்பர் படங்கள்
அண்ணாவின் 'வேலைக்காரி' வெற்றிக்கு பிறகு, அவரது பிரபலமான நாடகமான "ஓர் இரவு" என்பதை வைத்து படமாக எடுத்தது ஏவிஎம்.. நாத்திக கருத்துக்கள் இந்த ஓர் இரவு நாடகத்தில் இதில் பிச்சிக்கிட்டு போனது.. ஆனால், படமாக எடுக்கும்போது, அரசியல், நாத்திக கருத்துகள் நீக்கப்பட்டு, பாட்டுகள் சேர்க்கப்பட்டதால், அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. இது அண்ணாவை கொஞ்சம் சங்கடமாக்கிவிட்டது.
பாரதிராஜா வந்தபிறகு, இந்த உலகம் மாறியது.. செட்களில் இருந்து விலகி, யதார்த்தமான கிராமத்து சூழலுக்கும், சமூக பிரச்சனைகளுக்கும் சினிமா மாற துவங்கியது..
பாரதிராஜா ஒழிச்சிட்டாரா
குறிப்பாக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் இது ரெண்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது. பாரதிராஜா, கேமராவை ரோட்டுக்கும், கிராமத்துக்கும் தூக்கிட்டுபோய் ,ஷூட் செய்து, படங்களை ஹிட்டாக்கிவிட்டார்.. இதனால், பாரதிராஜாவை ஏவிஎம் கூப்பிட்டு, "என் ஸ்டுடியோவையே ஒழிச்சிட்டியேப்பா?" என்றதாம்..
தன்னுடைய ஸ்டுடியோ ஒழிந்துவிடக்கூடாது என்பதற்காகவே எடுக்கப்பட்ட படம்தான் முரட்டுக்காளை.. ஏவிஎம் நிறுவனம் தன் ஸ்டுடியோவைப் பாதுகாக்க, பழைய கமர்சியல் ஃபார்முலாக்களான சண்டை, நடனம், ஹீரோயிசம் போன்றவற்றை மீண்டும் கொண்டு வரும்வகையில், முரட்டுக்காளை படத்தை எடுத்தது.. ஏவிஎம்மின் இந்த படம்தான், சினிமா உலகில் மீண்டும் ஹீரோயிசத்தை நிலைநாட்டியது.
அதிலும் சகலகலா வல்லவன் படம் ஏமிஎம் ஸ்டுடியோக்களில் எடுக்கப்பட்டு, மொத்தத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது.. உடனே பாரதிராஜா, "நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு சினிமாவை மாற்ற முயற்சித்தேன்.. நீங்கள் மறுபடியும் உங்கள் பாணிக்கே திருப்பி கொண்டுபோய் விட்டீர்களே" என்றாராம். அந்த அளவுக்கு ஏவிஎம் படங்கள் சக்ஸஸ் தந்தன.
ஏவிஎம் சரவணன்
ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு அவரது வாரிசுகள் வந்த பிறகும் படங்களை எதிர்பார்த்த வசூலை தரவில்லை.. தொடர்ச்சியான தோல்விகள் காரணமாக ஏவிஎம் படம் எடுப்பதை நிறுத்திக்கொண்டது.. ஒரு கட்டத்தில் படம் எடுக்காமல் இருந்ததாலேயே தனக்கு 8 கோடி ரூபாய் லாபம் கிடைத்ததாக ஏவிஎம் சரவணன் ஒருமுறை கூறியிருந்தார்..
ஸ்டுடியோக்கள், தியேட்டர்களின் வீழ்ச்சி, டிவி சீரியல்களின் எழுச்சி போன்ற காரணங்களால் ஏவிஎம் நிறுவனம் படம் எடுப்பதை நிறுத்திவிட்டது.. ஏவிஎம் ஸ்டுடியோவின் பெரும்பாலான பகுதி அப்பார்ட்டமென்ட்டாகி விட்டது.. இருந்தாலும், சில ரெக்கார்டிங் ரூம்களை மட்டும் ஏவிஎம் சரவணன் வைத்திருந்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications