தேவயானி புருஷன் 2 டப்பா படம் எடுத்துட்டு கண்டபடி பேசுறாரே? சினிமாவின் உதிரிகள் இவர்கள்தான்: பிரபலம்
சென்னை: மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். அதில் ஒன்றும் பெரிதாக இல்லை. அது ஒரு சாதாரணப் படம் அவ்வளவுதான். இதுக்கா இரண்டரை மணி நேரம்" என்று கேட்டு சினிமா உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.. இதற்கு ஏராளமானோர் தங்களது காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அந்தவகையில் மூத்த பத்திரிகையாளர் ஜீவ சகாப்தனும் தன்னுடைய கருத்தை வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.
Jeeva Cinema என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ஜீவ சகாப்தன், "தேவயானியின் கணவர், என்ன பேசுவதென்று தெரியாமலேயே சில நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறார்.. அவருடைய மண்டையில் என்ன சரக்கு இருக்கிறது என்று தெரியவில்லை..

ராமநாராயணன் 100 படங்கள் எடுத்தார், ஆனால் மகேந்திரன் 2, 3 படங்களை தான் எடுத்தார் என்று ஒப்பிடுவது சினிமா அறிவின்மையாகும்.. கழுதைக்கு தெரியுமா என்ற பழமொழிதான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
மகேந்திரன், பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, ஸ்ரீதர், கே. பாலசந்தர் போன்றவர்களின் படங்களை பார்க்காமலேயே, ஒரு திரைப்பட மாணவன் உருவாகிறார் என்றால், அது சமூகத்துக்கு சீர்கேடு. காரணம், மேற்கண்ட இயக்குனர்கள்தான் கேமரா ஆங்கிள், கதை சொல்லும் விதம், யதார்த்தத்தை படைக்கும் விதம் போன்றவற்றில் வித்தியாசத்தை கொண்டு வந்தவர்கள்.
உதிரிப்பூக்கள் படம்
இவர்களின் கருத்துக்களில், உரையாடலில் யார் வேண்டுமானாலும் முரண்படலாம், உடன்படலாம்.. ஆனால், இவர்கள்தான் சினிமாக்களில் வித்தியாசத்தை தந்தவர்கள், திரைமொழியின் வடிவத்தை மாற்றியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் ராஜகுமாரன், 2 டப்பா படத்தை எடுத்து வைத்துள்ளார். ராஜகுமாரனுக்கு இன்று வரை இருக்கும் ஒரே அடையாளம் "தேவயானி புருஷன்" என்பது மட்டும்தான். தேவயானி கொடுத்த வாழ்க்கையினால் கிடைத்த முகம் மட்டுமே இவருக்கு உள்ளது.. படைப்பை ரசிக்க தெரியாதவர், படைப்பாளியின் திறமையை அறிய முடியாதவர் எப்படி சினிமா இயக்குனராக இருக்க முடியும்? உணர்வுகளை புரிந்துகொள்ளாத ராஜகுமாரன் ஒரு இயக்குநரே கிடையாது.
விஜயன் கிளைமாக்ஸ்
உதிரிப்பூக்கள் கிளைமாக்ஸில் விஜயன் பேசுகிறார், "நான் பண்ண தப்புலயே பெரிய தப்பு எதுன்னு தெரியுமா? நல்லவங்களா இருந்த உங்களையும் கெட்டவனா மாத்திட்டேன் பாருங்க" என்பார்.. இந்த டயலாக்கின் உயிர், சமூக யதார்த்தம்கூட ராஜகுமாரனுக்கு புரியவில்லை.
சாகப் போகும் தந்தையை பார்க்க வரும் 2 குழந்தைகளுக்கும் உண்மை தெரியாது. அவர்கள் சிரித்து முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது, அப்பா தண்ணீரில் இறங்குவதைக் கண்டு கதறிக் கண்ணை மூடி அழும் காட்சி, அனைவருக்குமே கண்ணீர் வரக்கூடியது. உதிரிப்பூக்கள் என்பதன் அர்த்தம் அப்போதுதான் தெரியும்..
தேவயானி புருஷனுக்கு அர்த்தமே தெரியல
தேவயானி புருஷனுக்கு இந்த அர்த்தம்கூட புரியல.. எந்தவிதமான அரசியலும், சினிமா பார்வையும், அழகியல் தன்மையும் இல்லாத தேவயானி புருஷன் போன்றவர்கள்தான் இந்த சினிமாவின் உதிரிகள்.
ராஜகுமாரன், தரமான உருப்படியான படத்தைப் பார்த்ததே இல்லை போலும்.. பாம்பு குரங்கு ஓடி வரும், காளைமாடு ஓடி வரும்.. இப்படி ராமநாராயணன் படத்தை பார்த்தே ராஜகுமாரன் வளர்ந்துள்ளார்.. எனவேதான் மகேந்திரனின் உயரம் ராஜகுமாரனுக்கு தெரியவில்லை..
மசாலா டைரக்டர்கள் கூட, மகேந்திரனைப் பார்த்து "நம்மளால கிளாசிக்கான படம் எடுக்க முடியாது" என்று ஒரு தன்னடக்கத்தோடவாவது இருப்பார்கள்.. ஆனால் இந்த தேவயானி புருஷனுக்கு அந்த தன்னடக்கமும் இல்லை. நல்ல படங்களைப் பார்ப்பவரால்தான் நல்ல படங்களை எடுக்க முடியும்..
மண்டையில் என்ன சரக்கு?
படைப்பாளியின் தரத்தை படங்களின் எண்ணிக்கையை வைத்து அளவிடும் அவருடைய தரமும், மண்டையில் என்ன சரக்கு இருக்கிறது என்பதும் தெரியவில்லை.. இன்றைய தலைமுறையினர், ராஜகுமாரன் போன்றோர் உதிர்க்கும் கருத்துகளுக்குப் பலியாகிவிடக் கூடாது..
மகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? என்று ராஜகுமாரன் கேட்கிறார்.. மகேந்திரன் முன்னாடி நீங்களெல்லாம் ஒரு ஆளே கிடையாது என்பதுதான் தமிழ் திரை வரலாறு தெரிந்தவர்களின் கருத்தாக இருக்க முடியும்" என்றெல்லாம் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் ஜீவா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications