சுந்தர் சி ரஜினி, கமலுக்கு அவமானத்தை தந்தாரா? தலைவர் 173ல் ரூ.30 கோடி சம்பளம்? உடைத்து பேசிய பிரபலம்
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. டைரக்ட் செய்வதாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி அதிரடியாக அறிவித்து விட்டார்.. அவரது இந்த அறிவிப்பானது, திரையுலக ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது .இதற்கான காரணம் என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Citi For Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, அருணாச்சலம் படத்துக்கு பிறகு, இத்தனை வருடங்கள் கழித்து, கமல்ஹாசன் தயாரிப்பில், மீண்டும் ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை சுந்தர் சியே எதிர்பார்த்திருக்க மாட்டார்..
2 லெஜண்ட்களுடன் பணிபுரிவதற்கான சூழல் சுந்தர் சி-க்கு வந்துள்ளது. கமல், ரஜினியின் பெருந்தன்மைதான் இதற்கு காரணம்..அதிலும் பெரிய பட்ஜெட் படத்தை சுந்தர் சி இதுவரை இயக்காதபோது, நம்பிக்கையின்பேரில்தான், வாய்ப்பை ரஜினி, கமல் தந்தனர்.. அதற்கு இன்னொரு காரணம், லைட்டரான காமெடி சப்ஜெக்ட் கதை என்பதுதான்.. எனினும் இந்த புராஜெக்ட்டில் இருந்து சுந்தர் சி வெளியேறி உள்ளார்..

அவமானத்தை ஏற்படுத்திட்டார்வழக்கமாக, ஒரு படத்தை துவங்கும்போது அதிலுள்ள தயாரிப்பாளர், டைரக்டர்களுக்கு ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் வரும்.. அல்லது இயக்குனருக்கும் ஹீரோவுக்கும்அல்லது ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் மனஸ்தாபம் வருவது இயல்பான விஷயம்.அப்படி மனஸ்தாபங்கள் வந்தால் ஒருவருக்கொருவர் சமாதானமாக பேசி,அதற்கு பிறகே அந்த படத்திலிருந்து யாராவது விலகுவார்கள்.. இப்படித்தான் பல படங்களில் இதற்கு முன்பு நடந்துள்ளது. ஆனால் சுந்தர் சி, ஜஸ்ட் லைக் தட் என்று பொதுவெளியில் பதிவிட்டார்.. இது கமலுக்கும், ரஜினிக்கும் மிகப்பெரிய அவமானத்தை தந்துவிட்டது..
ரஜினி, கமலுக்கே அதிர்ச்சி
அறிக்கையை வெளியிட்டு ஒரு மணி நேரத்துக்கு சுந்தர்-சிக்கு நிறைய போன்கள் வந்திருக்கின்றன.. ஆனால் எந்த போனையும் சுந்தர் சி எடுக்கவில்லை.. பிறகு போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.அதேபோல இந்த முடிவை எடுத்ததே சுந்தர் சிதான்.. ரஜினியிடமோ, கமலிடமோ டிஸ்கஸ் செய்துவிட்டு எடுக்கவில்லை.. இந்த அறிவிப்பை சோஷியல் மீடியாவில் பார்த்துதான் கமல், ரஜினியே தெரிந்து கொண்டார்கள்.. இதனால் இரு தரப்பிலுமே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. எனினும் இதற்கான காரணம் என்ன என்பது ரஜினி, கமலுக்கே தெரியாது.. சுந்தர் சி-க்கு மட்டுமே தெரியும்.
ஃபர்ஸ்ட் காப்பி பிரச்சனைஃபர்ஸ்ட் காப்பி தர வேண்டும் என்ற அடிப்படையில்தான் படத்தை இயக்க சுந்தர் சி.ஒப்புக் கொண்டதாகவும், அதற்கு கமல் மறுத்ததாகவும் அதனால்தான் சுந்தர் சி இதிலிருந்து விலகி விட்டார் என்றும் சொல்கிறார்கள்.. அதெல்லாம் தவறான கணிப்புகள்..ரஜினி நடிக்க, கமல் தயாரிக்க, சுந்தர் சி இயக்குவது என முடிவாகும்போது, சம்பளம் உட்பட அனைத்து விஷயங்களும் பேசி முடித்திருப்பார்கள்.. மேலும், படத்தை ஃபர்ஸ்ட் காப்பியில் எடுப்பதா? அல்லது படத்தை மட்டும் எடுத்து தருவதா? என்பதை பற்றியும்கூட பேசி முடித்திருப்பார்கள்..
ரூ.30 கோடி சம்பளம்
பிறகு படம் பற்றின அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான வீடியோ, போட்டோக்களை வெளியிட்டு, இவ்வளவும் செய்து, ப்ரீ-புரொடக்ஷன் நடக்கும் நேரத்தில் திடீரென வந்து, தனக்கு ஃபர்ஸ்ட் காபி தந்தால்தான் படம் செய்வேன் என்றெல்லாம் சுந்தர் சி சொல்லியிருக்க மாட்டார்.அதுமட்டுமல்ல, இந்த படத்துக்கு சுந்தர் சி-க்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.. அவரது வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத பெரிய சம்பளம்..
மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கே 15 கோடி ரூபாய்தான் சுந்தர் சி-க்கு சம்பளம்... ஆனால், இந்த படத்துக்கு டபுள் மடங்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது.. இதுவே தனக்கு ஜாக்பாட் என்றுதான் சுந்தர் சி நினைத்திருப்பாரே தவிர, ஃபர்ஸ்ட் காப்பி வேண்டும் என்று கேட்டிருக்க மாட்டார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications