Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சூர்யாவை நான் லவ் பண்ணுனேன்.. நட்பை முடித்துக்கொண்டது இதனால் தான்” – வெளிப்படையாக பேசிய இயக்குநர் அமீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யாவுடன் நீண்ட காலம் நெருக்கமான நட்பாக பழகியிருந்த இயக்குநர் அமீர், அந்த நட்பை ஏன் முடித்துக்கொண்டார் என்பதை சமீபத்தில் அளித்த ஒரு யூடியூப் பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். 'மௌனம் பேசியதே' படம் ரீரிலீஸ் ஆகும் சூழலில், அந்த காலகட்ட நினைவுகளையும், சூர்யாவுடனான உறவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மௌனம் பேசியதே படம்

தமிழ் சினிமாவில் அமீரை இயக்குநராக அடையாளம் காட்டிய படம் 'மௌனம் பேசியதே' தான். 2002-ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம், சூர்யாவின் கேரியரில் முக்கியமான ஒரு turning point ஆக அமைந்தது. காதலை சத்தமில்லாமல் சொல்லும் ஒரு மென்மையான காதல் கதையாக இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் மூலம் சூர்யாவும் 'next level' நடிகராக அடையாளம் காணப்பட்டார் என்றே சொல்லலாம்.

Director Ameer Suriya Tamil Cinema

இந்த நிலையில் இந்த படம் ரீ ரிலீஸ் ஆவது குறித்து இந்த படத்தில் நடித்த சூர்யா மற்றும் நடிகை லைலா போன்ற பலரும் வீடியோக்கள் வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து மௌனம் பேசியதே இயக்குநர் அமீர் இந்த படத்தை பற்றி சில நினைவுகளை பேட்டிகளில் பேசியிருக்கிறார். அதில் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யாவ என்னுடைய நெருங்கிய நண்பர்.

நான் உதவி இயக்குனராக அறிமுகமான கட்டத்தில் அவரும் சினிமாவில் அப்போதுதான் நடித்துக் கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் அவ்வளவு பேசிக்கொண்டே இருப்போம். நான் அவரை அவ்வளவு ரசிப்பேன். அவரை லவ் பண்ணுனேன் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு எனக்கு அவரை பிடிக்கும். எங்கே போனாலும் என்னை தான் கூப்பிடுவார். நானும் அவரை தான் கூப்பிடுவேன்‌. அந்த காலகட்டம் எல்லாம் ரொம்ப ஜாலியாக இருந்தது.

Director Ameer Suriya Tamil Cinema

பிறகு, "படம் வெளியான நாள் நான் மதுரையில் இருந்தேன். இரவு படம் பார்த்துவிட்டு சூர்யா எனக்கு போன் பண்ணினார். 'படம் நல்லா இருக்கு, மக்கள் கொண்டாடுறாங்க'ன்னு சந்தோஷமாக சொன்னார். நான் 'அப்படியா?'ன்னு சாதாரணமாக கேட்டேன். நான் உற்சாகமாக பேசுவேன் என்று அவர் எதிர்பார்த்தார் போல. அந்த ஒரு சின்ன விஷயமே அவருக்கு கொஞ்சம் hurt ஆன மாதிரி தெரிந்தது" என்று அமீர் கூறியிருக்கிறார். அந்த ஒரு சம்பவம் மட்டும் தான் பிரச்சனைக்குக் காரணம் இல்லை என்றும், காலப்போக்கில் இருவருக்குள்ளும் ஒரு distance உருவாகி வந்ததாகவும் அமீர் கூறியிருக்கிறார்.

சூர்யா செய்த உதவி

அதுபோல சூர்யா செய்த உதவிகள் பற்றி நிச்சயம் அமீர் பேசி இருக்கிறார். "நந்தா படத்தின் போது எனக்கும் சூர்யாவுக்கும் நல்ல நட்பு இருந்தது. அவரை நான் ஒருபோதும் 'ஹீரோ' என்று பார்த்தது இல்லை. நண்பனா தான் பார்த்தேன். நேரில் சந்தித்தால் 'வாங்க ஜீ'ன்னு தான் பேசுவோம். ஒருமுறை எனக்கு கடுமையான காய்ச்சல் வந்த போது, மருத்துவமனையில் இருந்து என்னை கூட்டிக்கொண்டு போய் மறுபடியும் காலையில் விட்டுவந்தவர் சூர்யா. அந்த அளவுக்கு ஒரு close friendship எங்களுக்குள் இருந்தது" என்று அவர் கூறுகிறார்.

ஆனால் சினிமா உலகில் சில மரபுகள், விதிமுறைகள் இருக்கின்றன. "சூர்யாவை 'சார்' என்று அழைக்க வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அது எனக்கு மனசுக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. என் இயல்பு அப்படி இல்லை. என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை" என்று அமீர் நேர்மையாக சொல்கிறார்.

இதன் பிறகே அவர் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார். "நான் யாரிடமிருந்தும் விலகுகிறேன் என்றால், அது அவர்கள் தப்புனால இல்ல. அது என் தப்பாக தான் இருக்கும். அதை உணர்ந்த பிறகே நான் விலகுகிறேன். சூர்யாவிடம் இருந்து விலகினதும் அப்படித்தான். பாலா, சீமான் ஆகியோரிடமிருந்தும் நான் இப்படித்தான் விலகினேன்.

Thangar Bachan: தமிழில் மந்திரங்கள் ஓத… இயக்குநர் தங்கர் பச்சான் மகன் விஜித் திருமணம்.. திருப்பதியில் கோலாகலம்
தமிழ் தேசியம் போன்ற கருத்துகளில் ஆரம்பத்தில் நாங்கள் ஒரே line-ல் இருந்தாலும், பின்னாடி அரசியல் பார்வையில் வித்தியாசம் வந்தது. சூர்யா இப்போது ஒரு பெரிய உயரத்தில் இருக்கிறார். அவரோடு இருந்துகொண்டு அவருக்கு தொந்தரவாக இருக்க நான் விரும்பவில்லை. அதனால் நானே பின்வாங்கினேன்" என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+