இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் அமீர் சமீபத்தில் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக "துரந்தர் 2" படத்தை எடுத்துக்காட்டாக வைத்து அவர் கூறிய கருத்துகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

Ameer Durandhar 2 Tamil Cinema Controversy

இயக்குனர் அமீர் சர்ச்சை பேச்சு

அமீர் தனது பேச்சில், "ஒரு இந்திய உளவாளி பாகிஸ்தானில் செயல்படுவதை பெருமையாக காட்டுகிறீர்கள். ஆனால் அதே நேரத்தில், இந்தியாவில் ஒரு பாகிஸ்தானியர் இருந்தால் அவரை தீவிரவாதி என்று பார்க்கிறீர்கள். மதத்தை வைத்து இப்படி வாழ்வதும், தீவிரவாத மனநிலையும் கிட்டத்தட்ட ஒன்றே" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் தீவிர எதிர்ப்பையும், ஆதரவையும் ஒரே நேரத்தில் பெற்றுள்ளது.

"துரந்தர் 2" - கதை என்ன?

துரந்தர் 2 ஒரு பக்கா ஆக்ஷன்-ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், பாகிஸ்தானுக்குள் மறைமுகமாக நுழைந்து, நாட்டிற்கு எதிரான பெரிய சதித் திட்டத்தை தடுக்க முயல்வது தான் படத்தின் மையக்கதை.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள கதாபாத்திரம், தனது அடையாளத்தை மறைத்து எதிரி நாட்டில் செயல்படுகிறார். அங்கு அரசியல், மதம், பயங்கரவாதம் ஆகியவை இணைந்த சூழலில், பல சவால்களை எதிர்கொண்டு நாட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். கிளைமாக்ஸ் பகுதியில், உணர்ச்சி மற்றும் தேசபற்று கலந்த காட்சிகள் முக்கிய இடம் பெற்றுள்ளன.

படம் முழுக்க தேசபற்று, உளவு நடவடிக்கைகள், த்ரில், ட்விஸ்ட்-all-in-one வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே ரசிகர்களை திரையரங்கிற்கு இழுத்து வந்த முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

வசூலில் "துரந்தர் 2" எப்படி?

வெளியான முதல் வாரத்திலேயே "துரந்தர் 2" நல்ல ஓப்பனிங்கை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மாஸ் ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் 3 நாட்களில் படம் நல்ல அளவிலான வசூலை பதிவு செய்ததாக கூறப்படுகிறது

வடஇந்திய மாநிலங்களில் படம் அதிக வரவேற்பு பெற்றுள்ளதாக தகவல் வார இறுதி காட்சிகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்கள் அதிகரித்துள்ளதாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

எனினும், விமர்சகர்கள் தரப்பில் கலவையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. சிலர் படத்தின் வேகம், ஆக்ஷன் காட்சிகளை பாராட்டினாலும், சிலர் கதை பழக்கப்பட்ட ஃபார்முலாவை பின்பற்றுகிறது என கூறுகின்றனர்.

அமீர் பேச்சு - ஏன் சர்ச்சை?

இப்படத்தின் பின்னணியில் அமீர் கூறிய கருத்து தான் தற்போது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அவர் , சினிமாவில் தேசபற்று பெயரில் சில சமயம் ஒரு பக்க பார்வை மட்டும் காட்டப்படுகிறது. அது சமூகத்தில் தவறான புரிதல்களை உருவாக்கும் அபாயம் உள்ளது என்றார்.

இந்த கருத்துக்கு எதிராக பலர், "இது ஒரு படம் மட்டுமே, அதைக் கொண்டு நிஜ வாழ்க்கையை ஒப்பிட முடியாது" என்று விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் அமீரின் கருத்தை ஆதரித்து, "சினிமா சமூக மனநிலையை பாதிக்கும் சக்தி கொண்டது, அதனால் இப்படியான கேள்விகள் முக்கியம்" என்றும் கூறுகின்றனர்.

ரசிகர்கள்

அமீர் பேசிய வீடியோ வெளியானதும், சமூக வலைதளங்களில் கடும் விவாதம் வெடித்துள்ளது. ஒரு தரப்பு, "தேசபற்று படங்களை இப்படி விமர்சிப்பது தவறு" என்று கூறி வருகின்றனர். மற்றொரு தரப்பு, "அவர் சொல்லும் விஷயத்தில் உண்மை இருக்கிறது" என்று கூறுகின்றனர். இதனால் இரண்டு தரப்பும் கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+