Selvaraghavan : சுற்றி நடந்த துரோகம்.. இது கடவுளின் நியதி.. செல்வராகவன் திடீர் போஸ்ட்! விஷயம் இதுதானா?
சென்னை: இயக்குனர் செல்வராகவன் அவருடைய இரண்டாவது மனைவி கீதாஞ்சலியை பிரிய போகிறாரா? என்று கேள்விகள் சில நாட்களாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. இந்த நிலையில் செல்வராகவன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு வருத்தமான பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
இயக்குனர், கதை ஆசிரியர், நடிகர் என பல திறமைகளை கொண்ட செல்வராகவன் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி அவர் தத்துவமாக பேசி வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதோடு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிடுவார். ஆனால் இப்போது செல்வராகவன் பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கினர். முதல் படமே அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் நடிகை சோனியா அகர்வாலை அறிமுகம் செய்து வைத்தார். அந்த திரைப்படத்திலும் முதல் படத்தைப் போலவே தன்னுடைய தம்பியைத்தான் நடிக்க வைத்திருந்தார். இந்த படத்தில் போது சோனியா அகர்வாலுடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்து 7G ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை போன்ற படங்களிலும் சோனியா அகர்வால் நடித்திருந்தார். பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடல் 2019 ஆம் ஆண்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான கீதாஞ்சலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவனின் புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்திருக்கிறார். இதனால் இருவரும் விவாகரத்து செய்து பிரிய போகிறார்களா என்று கேள்விகள் எழுந்து வருகிறது. காரணம் சமீப காலமாகவே திரை பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் போஸ்ட்களை டெலிட் செய்து தாங்கள் பிரிவதை அறிவித்து வருகிறார்கள். அதேபோல இப்போது கீதாஞ்சலியும் செய்கிறாரா என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் செல்வராகவன் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள்.. அப்போது அமைதியா இருங்கள்.
சில காலம் தான். பெரும் மலை பனி போல் போகும், அனைத்தும் சரியாகிவிடும். இது கடவுளின் நியதி என்று செல்வராகவன் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் அன்னை உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி எல்லாம் போஸ்ட் போடுறீங்க என்ன நடந்தது என்று கொஞ்சம் தெளிவா சொல்லுங்க என்று கேட்டு இருக்கிறார்கள்.
Selvaraghavan: செல்வராகவன் இரண்டாவது மனைவியை பிரிகிறாரா? சோசியல் மீடியாவில் கீதாஞ்சலி செய்த செயல்!
இன்னும் சில ரசிகர்கள் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நீங்கள் இன்னும் கடவுளை வெறுக்கவில்லை என்று தெரிகிறது என்றும் பாராட்டி இருக்கிறார்கள். அதோடு சிலர் நீங்கள் சொல்லும் அட்வைஸ் எல்லாம் எங்களுக்கே சொல்வது போல இருக்கிறது உண்மையில் வாழ்க்கையில் நீங்க ரொம்ப அடிபட்டு இருக்கீங்க என்றும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications