Kaithi Monica: தமிழக அரசு விருது திறமையானவர்களுக்கா கொடுத்திருக்காங்க? கைதி நடிகை மோனிகா ஆதங்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நடிகர்கள் இல்லாம ஒரு முழுமையான படம் இருக்குமா? சில நிமிடங்களே திரையில் வந்தாலும், கதையின் எமோஷனை ரசிகர்கள் மனசுல பதிய வைக்கிற வேலையை இந்தக் குழந்தை நடிகர்கள்தான் பக்காவா செய்து வர்றாங்க. 'தெய்வத் திருமகள்', 'மொழி', 'காக்கா முட்டை', 'பசங்க' மாதிரி படங்களை எடுத்துக்கிட்டாலே, குழந்தை நட்சத்திரங்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம்னு புரியும்.
அப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த குழந்தை நட்சத்திர விருது குறித்து, 'கைதி' படத்தில் நடித்த சிறுமி மோனிகா இப்போது வெளிப்படையா தன்னோட மனவருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவர் போட்ட பதிவு வேகமா பரவி, தமிழ் திரையுலகத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பேசப்படும் விஷயமாக மாறிடுச்சு.

மோனிகாவின் வருத்தம்
மோனிகா தனது பதிவில், "தமிழக அரசு அறிவித்த சிறந்த குழந்தை நட்சத்திர விருது பெற்றவர்கள், உண்மையிலேயே அந்த அளவுக்கு தாக்கம் உள்ள வேடங்களில் நடித்தார்களா? என்ற கேள்வி எனக்குள்ள எழுகிறது. நான் விருது கிடைக்கலன்னு சொல்றதுக்காக இதை பேசல. என்னைப் போலவே பல குழந்தை நடிகர்கள் நல்ல கதாப்பாத்திரங்களில் நடிச்சு, மக்களிடம் பாராட்டு வாங்கியிருக்காங்க.
அவர்களில் யாருக்காவது இந்த விருது கொடுத்திருந்தா, 'சரி, தகுதியான ஒருத்தருக்கு கொடுத்திருக்காங்க'னு மனசார ஏத்துக்கிட்டிருப்பேன். ஆனா, யாரோ ஒருத்தரின் பரிந்துரை, செல்வாக்கு மூலமா இந்த விருதுகள் போயிருக்குமோன்னு சந்தேகம் வருது. இது அரசின் மாநில விருது. அதனால இதுல முழு நியாயமும் வெளிப்படைத்தன்மையும் இருக்கணும். இதை முதலமைச்சரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கவனிப்பாங்கன்னு நம்புறேன்"னு ஓப்பனா சொல்லியிருக்கார்.
இது யாரையும் நேரடியாக குற்றம் சாட்டும் பேச்சு இல்ல. ஆனாலும், "விருது வழங்கும் முறையில் நியாயம் இருக்கா?"ன்னு ஒரு முக்கியமான கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார்.

மோனிகாவை போலவே சீரியல் நடிகை லட்சுமியும் ஆதங்கத்துடன் பேசி இருந்தார். அதாவது தான் நடித்த செம்பருத்தி சீரியலில் தான் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்தாலும் , அது அதிகமாக பேசப்பட்டது. அந்த கேரக்டருக்காக நான் நிறைய கஷ்டப்பட்டேன். டப்பிங்கையும் என் சொந்த குரலிலேயே செய்தேன். ஒரு நடிகையாக முழுமையாக உழைத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
இவ்வளவு உழைப்புக்குப் பிறகும், தனது நடிப்புக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காதது மனதை வலிக்கச் செய்ததாக அவர் கூறுகிறார். இந்த விருதுகள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன? யார் தேர்வு செய்கிறார்கள்? அந்த தேர்வு முறையே என்ன?" என்பது கேள்வியாக இருப்பதாகவும் பேசி இருக்கிறார்.
"இது உண்மையில் தமிழ்நாடு அரசு விருது என்றால், திறமையானவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் பல சமயங்களில், குடும்பத்தினர், நெருங்கியவர்கள், சொந்தக்காரங்களுக்கு மட்டுமே விருதுகளை பெறுகிறார்கள் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது" என அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதேபோல பா ரஞ்சித், இயக்குனர் கௌதம் ராஜ் மற்றும் குழந்தை நட்சத்திரம் அஸ்வின் போன்ற பலரும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.
கைதி படத்தில் நடித்த மோனிகா எழுப்பிய இந்த கேள்வி, ஒருத்தருக்கான வருத்தமாக மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவில் விருது வழங்கும் முறையே சரியா நடக்குதா?ன்னு எல்லாரையும் யோசிக்க வைக்குற ஒரு முக்கியமான விவாதமாக மாறியிருக்கிறது.
-
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்!












Click it and Unblock the Notifications