Vaa Vaathiyaar Day 1 Box Office: பராசக்தியுடன் மோதிய வா வாத்தியார்! முதல் நாள் வசூல் எவ்வளவு?
சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' பொங்கல் பண்டிகையையொட்டி நேற்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களுடன், முதல் நாள் வசூலிலும் எதிர்பார்த்த இலக்கை இத்திரைப்படம் எட்டியதா என பார்க்கலாம்.
கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, ராஜ்கிரண், சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத் முக்கிய பாத்திரங்களில் உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' போன்ற படங்களை அளித்த நலன் குமாரசாமி, நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியதால் 'வா வாத்தியார்' மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
மக்களுக்காகப் போராடும் ஓர் இளைஞர் அமைப்பை என்கவுண்டர் செய்ய அரசியலும் காவல்துறையும் கைக்கோக்க, ராஜ்கிரணின் பேரனும் எம்.ஜி.ஆர் ரசிகருமான கார்த்தி, எம்.ஜி.ஆர் அவதாரம் எடுத்து சதித் திட்டங்களை முறியடிப்பதே கதைக்களம். எம்.ஜி.ஆர். கோணம் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.
பழைய படங்களை பார்த்த நினைவுகளை மீட்கும் வகையில், அந்த அம்சம் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். பாணியில் கார்த்தி வெளிப்படுத்திய துடிப்பும், அவரது ஆற்றலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வது, கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரம் வலுவாக அமையாதது, சத்யராஜின் வில்லன் வேடம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாதது போன்ற காரணங்களால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைப்பதாகவும் ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முதல் நாளில் 'வா வாத்தியார்' திரைப்படம் தமிழகத்தில் ரூய 1.67 கோடியை வசூலித்தது. உலகளவில், முதல் நாள் வசூல் ரூ. 5 கோடிக்கும் குறைவாக உள்ளது. இது 'பராசக்தி'யை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தியின் முந்தைய படங்களான 'மெய்யழகன்' மற்றும் 'ஜப்பான்' படங்களின் முதல் நாள் வசூலைக் காட்டிலும், 'வா வாத்தியார்' வசூல் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால், அடுத்த நாட்களில் வசூல் உயருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பராசக்தி படம் நேற்றைய தினம் தமிழகத்தில் ரூ 2.17 கோடி வசூலை பெற்றது. பராசக்தி கடந்த 10ஆம் தேதி வெளியான நிலையில் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்து வருகிறது. முதல் இரு நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூலானது. இந்த படத்தில் மொழி போராட்டம் குறித்து பேசப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் நடிப்பு, சுதா கொங்கராவின் இயக்கம் அருமை என பலர் பாராட்டி வருகிறார்கள்.
முதல் நாளே பராசக்தியுடன் முட்டி மோதும் நிலை வா வாத்தியார் படத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே படத்திற்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்ட நிலையில் தற்போது வசூலிலும் பின்தங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications