Khushbu: தலைவர் 173 படத்தை விட்டு சுந்தர் சி விலகிய பிறகு கமலை சந்தித்த குஷ்பு.. சம்பவம் இருக்கு போல!
சென்னை: தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் தூண்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரு திரைப்படத்துக்காக இணையப் போவதாக வந்த செய்தி, ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் சுந்தர் சி. இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த 'தலைவர் 173' திரைப்படம்தான் அந்தத் திட்டம்.
'தலைவர் 173' திரைப்படத்தின் பூஜை ரொம்ப பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து, சினிமாத் துறையினர் மற்றும் ரசிகர்கள் இதனைப் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், பூஜை முடிந்து அடுத்த சில நாட்களிலேயே, இயக்குநர் சுந்தர் சி. தான் அந்த திரைப்படத்தை விட்டு விலகுவதாக அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. எந்தக் காரணமும் தெளிவாக தெரியாததால், இந்த விலகல் பெரிய அளவில் பேசப்பட்டது.

குஷ்பூவின் புதிய பதிவு
இப்படி ஒரு சூழலில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ, சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் சுஹாசினி ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அது குறித்த புகைப்படத்தைத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குஷ்பூ வெளியிட்ட அந்தப் பதிவில் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்:
அவருடைய நண்பியான சுஹாசினி உடன் ஒரு சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். "சினிமாவின் கலைக்களஞ்சியமான அவரிடமிருந்து அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது, இன்னும் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்க முடியாது" என்று நடிகர் கமல்ஹாசனைப் பாராட்டியுள்ளார். கமல்ஹாசன் தன்னுடைய சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டது மற்றும் அவருடைய மாணவராக தன்னுடைய அறிவுத் திறனை மேம்படுத்துவது பற்றியும் குஷ்பூ பேசியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது தான் நடிக்கும் புதிய படங்களில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனம் பெரிய படங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. குஷ்பூவின் இந்தச் சந்திப்பு, ரஜினி படம் பற்றிய விவாதங்களுக்குப் பிறகு வந்திருப்பதால், இவர்கள் சினிமா பற்றி மட்டுமில்லாமல் அந்தத் திட்டங்கள் பற்றியும் பேசியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தச் சந்திப்பின் மூலம் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் கமல்ஹாசன் தயாரிப்பில் எந்த இயக்குநர் வரப் போகிறார், என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications