Kombu Seevi Review: விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் கொம்பு சீவி எப்படி இருக்கு? பயில்வான் ரங்கநாதன் ரிவ்யூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொன்ராம் இயக்கத்தில், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள 'கொம்பு சீவி' படம் டிசம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில், 'நாட்டாமை' படத்தில் டீச்சராக நடித்த நடிகை ராணியின் மகள் தர்ணிகா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையும், கிராமத்து பின்னணியும் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கின. இந்த படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் இந்த படத்தை பார்த்து பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய ரிவ்யூ சொல்லி இருக்கிறார். ஏற்கனவே பட குழு செய்தியாளர்கள் சந்திப்பின் ஈடுபட்ட போது பயில்வான் சண்முக பாண்டியனிடம், நீங்க கஞ்சா கடத்துற கேரக்டரில் நடித்து இருக்கீங்களே இது சரியா? என்பது போல கேள்வி கேட்டு இருந்தார்.

Kombu Seevi review Bayilvan Ranganathan Shanmuga Pandian Sarathkumar

அதற்கு சண்முக பாண்டியன், நான் படத்தில் இந்த கேரக்டரில் நடிக்கும்போதே ஆரம்பத்தில் இயக்குனரிடம் இந்த கேரக்டர் முக்கியமா? என்று கேட்டேன். அதற்கு அவர் கஞ்சா கடத்துவது சரி என்று நாம எந்த இடத்திலும் சொல்லவில்லை . அதேபோல கஞ்சா கடத்துற நாங்களே இதை குடிக்க மாட்டோம் என்றும் வசனம் வைத்திருக்கிறோம். அந்த படத்தின் கதைப்படி ஹீரோவுக்கு வேற தொழில் எதுவுமில்லாததால் அதை செய்கிறார். கடைசியில் அதற்கு அவர் விளக்கத்தையும் கொடுத்திருப்பார் என்று சண்முக பாண்டியன் விளக்கம் கொடுத்திருந்தார்.

அதுபோல கொம்பு சீவி படத்தை பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசும்போது, படத்தின் கதையைப் பார்த்தால், ஊரில் பெரிய மனிதராக சரத்குமார் இருக்கிறார். வெளியில் அவர் மக்கள் நலன் நினைக்கும் மனிதராகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் கஞ்சா, மீன் கடத்தல் போன்ற சட்டவிரோத வேலைகளிலும் ஈடுபடுகிறார். ஆனாலும் அந்தப் பணத்தை தனக்காக அல்ல, ஊர் மக்களுக்காக பயன்படுத்துகிறார்.

ஒரு கட்டத்தில் அவர் ஆபத்தான சூழலில் சிக்கிக்கொள்ள, அப்போது சண்முக பாண்டியன் அவரது உயிரை காப்பாற்றுகிறார். அந்த சம்பவத்துக்குப் பிறகு, சரத்குமாருக்கும் சண்முக பாண்டியனுக்கும் இடையே ஒரு பாசப் பிணை உருவாகிறது. இதற்கிடையில் காவேரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. மக்கள் வாழ்வாதாரம் சீர்குலைய, அவர்களை காப்பாற்றவே சரத்குமார் கஞ்சா விற்பனை என்ற பெரிய ரிஸ்க் எடுக்கிறார்.

ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள டீல் ஒன்றை முடித்தால், ஊர் மீண்டு விடும் என்ற நம்பிக்கையில், சண்முக பாண்டியனுடன் சேர்ந்து அந்த சரக்கை லாரியில் எடுத்துச் செல்கிறார். அந்த முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா, போலீஸ் சிக்கல் வந்ததா என்பதுதான் மீதி கதை.

பயில்வான் ரங்கநாதனின் பார்வையில், சரத்குமார் இந்த படத்தில் அலட்டிக் கொள்ளாமல் ஜாலியான நாட்டாமையாக நடித்திருக்கிறார். சமீபத்திய டியூட் படத்தில் எப்படி இயல்பாக நடித்தாரோ, அதே சுலபத் தன்மை இங்கும் தெரிகிறது. அவர் இருக்கும் காட்சிகள் படத்துக்கு ஒரு ஸ்திரத்தன்மை கொடுக்கின்றன என்று கூறியிருக்கிறார்.

சண்முக பாண்டியன் சண்டைக் காட்சிகளில் மாஸ் காட்டுகிறார். தியேட்டரில் கைதட்டல் கிடைக்கும் அளவுக்கு ஆக்ஷனில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால் நடிப்பு விஷயத்தில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய இடம் இருக்கிறது என்றும் பயில்வான் சுட்டிக்காட்டுகிறார்.

திரைக்கதையில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், படம் சுவாரசியமான திருப்பங்களுடன் நகர்வதால் போர் அடிக்காமல் செல்கிறது. காளி வெங்கட், முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கான வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

வசூல் நிலவரம் குறித்து பார்த்தால், படம் மெதுவான தொடக்கம் தான் எடுத்துள்ளது. முதல் இரண்டு நாட்களில் தலா சுமார் 30 லட்சம் ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. மூன்றாவது நாளில் வசூல் கொஞ்சம் உயர்ந்து, சுமார் 36 லட்சம் ரூபாய் வரை சென்றுள்ளது. மூன்று நாட்களின் மொத்த வசூல் சுமார் 66 லட்சம் ரூபாய் என சொல்லப்படுகிறது. பெரிய ஹிட் இல்லை என்றாலும், முழு தோல்வி அல்லாத ஒரு சராசரி ஓட்டத்தில் படம் பயணித்து வருகிறது.

மொத்தத்தில், 'கொம்பு சீவி' குடும்பத்தோடு ஜாலியாக பார்க்கக்கூடிய ஒரு கிராமிய எண்டர்டெய்னர் என்றும், சரத்குமாரின் ஜாலியான நடிப்பும், சண்முக பாண்டியனுக்கான ஒரு அனுபவப் படமாகவும் இந்த படம் அமைந்துள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+