மனோரமாவின் கடைசி தருணம்! மெட்ரோ ரயிலே நின்று.. பூக்களை தூவிய நெகிழ்ச்சி! ஜோதிடரால் எல்லாமே போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1500 படங்கள், 5000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து, 'பெண் சிவாஜி' என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை மனோரமாவின் திரைக்கு பின்னால் இருந்த கண்ணீரையும், தனிப்பட்ட போராட்டங்களையும் குறித்து, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய நேர்காணலில் உருக்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். அதில் ஜோதிடத்தால் பிரிந்த மனோரமாவின் மண வாழ்க்கை பற்றியும் விரிவாக பேசியிருக்கிறார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, நடிகர் எஸ்.எம். ராமநாதனை காதலித்து, தன்னுடைய தாயின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்த மனோரமாவின் மண வாழ்க்கை, மிகக் குறுகிய காலமே நீடித்தது.

Cinema Manorama Chennai Metro Train

அவர் கர்ப்பமாக இருந்தபோது, பல நாடகங்களில் நடிக்க வேண்டும் என்று மனோரமாவை கட்டாயப்படுத்தியிருக்கிறார் ராமநாதன்.. அதுமட்டுமல்ல, ஒரு ஜோதிடர் 'இந்தப் பிள்ளை பிறந்தால் உங்களுக்கு உயிருக்கு ஆபத்து' என்று சொன்னதை கேட்டு, அவரது கணவர் ராமநாதன் மனோரமாவை நிரந்தரமாகவே பிரிந்து சென்றுவிட்டார்..

மகனால் காலம் முழுவதும் சோகம்!

கணவனால் கைவிடப்பட்ட மனோரமா, தன்னுடைய ஒரே மகன் பூபதியை தனியாளாக வளர்த்தார். ஆனால், மகனால் அவருக்கு காலம் முழுவதும் கஷ்டங்களே மிஞ்சின. மனோரமா, பூபதிக்காகவே வாழ்ந்தார்.. பூபதி பல படங்களில் நடித்தாலும், அதற்கு மனோரமாவே சிபாரிசு செய்தார். ஆனாலும் பூபதி எப்போதுமே குடித்துகொண்டே இருந்தார்.

1997-ல் டிரினிட்டி மருத்துவமனையில் என்னுடைய அப்பா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பூபதியும் குடிப்பழக்கம் மோசமாகி, அதே டிரினிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அப்போது மனோரமா என்னுடைய அப்பாவிடம் மனம்விட்டு அழுது வேதனைப்பட்டிருக்கிறார்..

வித்தியாசமான குரல்

காமெடி நடிகை என்று மட்டுமே மனோரமாவை முத்திரைப்படுத்தி விட முடியாது.. எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடித்தவர்.. அவரது குரல் வித்தியாசமானது.. அவரது பாடல் அருமையாக இருக்கும்.. பாட்டி சொல்லை தட்டாதே படத்தின்போது தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பாட்டியாக பேசப்பட்டார் மனோரமா.

இத்தனை விதமான கதாபாத்திரங்களில் அசத்திய நடிகை மனோரமாவுக்கு, இறுதிவரை நிறைவேறாத ஒரு ஆசை இருந்தது. அதுதான் திருநங்கை கேரக்டர்.. எப்படியாவது இந்த கதாபாத்திரத்தில் முழுமையாக நடித்துவிட வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.. ஆனால், அப்படியொரு கேரக்டரே அவருக்கு அமையவில்லை..

மெட்ரோ ரயிலில் அஞ்சலி!

சென்னை கடற்கரை ஐஜி ஆபீஸ் பின்புறம் உள்ள சுடுகாட்டில்தான் மனோரமா உடல் அடக்கம் செய்யப்பட்டது.. அப்போது மனோரமாவின் இறுதி ஊர்வலம் பிரம்மாண்டமாக
நடத்தப்பட்டது..

அந்த இறுதி ஊர்வலத்தின்போது, மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.. ரயிலில் இருந்த பெண்கள், தங்கள் தலையில் சூடியிருந்த மல்லிகை, ரோஜாப் பூக்களைக் கீழே வீசி, ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம், இன்றும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+