நயன்தாராவை அப்படி பேசினார்களே.. வலைப்பேச்சு டீம்! இப்போ ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்! இதுதான் மாற்றம்
சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் தமிழ் சினிமாவில் ரொம்ப கவனிக்கப்படுற ஜோடி. நயன் லேடி சூப்பர் ஸ்டார் அப்படின்னு சொல்லும் அளவுக்கு இடம் பிடித்திருக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து முக்கியமான கதைகள்ல நடிச்சு வர்றதால, ரசிகர்களும் இன்னும் அதிகமா அவரை கொண்டாடுறாங்க.
அதேசமயம் விக்கியும் தன் இயக்கப் பணிகள்ல பிசியா இருக்கார். இவர்களுக்கு உயிர், உலக் அப்படின்னு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்காங்கன்னு எல்லாருக்குமே தெரியும். இந்த ஃபேமிலியை தான் திரைப்பட விமர்சகர்களான வலைப்பேச்சு டீம் ஏர்போட்டில் சந்தித்து இருக்கிறார்கள். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது

ஒரு பக்கம் சினிமா அப்டேட்ஸ், இன்னொரு பக்கம் குடும்ப விஷயங்கள் என நயன்தாரா பற்றிய எந்த விஷயமும் சமூக வலைதளங்களில் பேசப்படாம இருக்குறதே இல்ல. சமீபத்துல துபாய்ல பெரிய வீடு வாங்கி அங்க பொங்கல் கொண்டாடின வீடியோ, அதுக்கப்புறம் அஜித்தின் அழைப்பை ஏற்று கார் ரேஸ் நடக்குற இடத்துக்கு போனது எல்லாமே வைரலானது.
ஆனா இப்போ வைரலாகுற விஷயம் வேற மாதிரி. ஏற்கனவே ஒரு வருடத்துக்கு முன்னாடி, ஒரு பேட்டியில நயன்தாரா வலைப்பேச்சு டீம் உறுப்பினர்களான பிஸ்மி, அந்தணன், சக்திவேல் மூவரையும் மூன்று குரங்குகள் என கடுமையா விமர்சிச்சிருந்தார். அதுக்குப் பிறகு வலைப்பேச்சு டீம்ல இருந்து நயன்தாராவுக்கு எதிரா தொடர்ந்து பேச்சுகள், விமர்சனங்கள் வந்ததை எல்லாரும் பார்த்தோம்.
இவ்வளவு நடந்த பிறகும், இப்போ துபாய் ஏர்போர்ட்டில் நயன்தாரா - விக்கி தம்பதியரை வலைப்பேச்சு டீம் சந்திச்சிருக்காங்க. அங்க எடுத்த வீடியோவும், போட்டோவும் இப்போ இணையத்துல செம்ம வைரல். அதுல நயன்தாராவோட குழந்தைகள் உயிர், உலக் கூட அவர்கள் சிரிச்சு பேசுறதும், கொஞ்சி விளையாடுறதும் இருக்கு.
குழந்தைகள் தமிழ்ல வணக்கம் சொன்னதுக்கு, 'நாங்க வீட்டில தமிழ்ல தான் பேசுவோம், அதையே குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறோம்'ன்னு நயன்தாரா சொன்னதையும் அந்த வீடியோல பார்க்க முடிகுது.
இதையெல்லாம் பார்த்த பலருக்கும் ஒரே கேள்வி தான். 'இவ்வளவு நாள் நயன்தாராவை விமர்சிச்சு பேசினவங்க, இப்போ அவரோட குடும்பத்தோட இப்படி சந்தோஷமா பேசுறது ஏன்?' அப்படின்னு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் எழுந்துட்டு இருக்கு.
மொத்தமா சொல்லப்போனா, முன்பு விமர்சனம், இப்போ ஏர்போர்ட் சந்திப்பு, சிரிப்பு, குழந்தைகளோட விளையாட்டு - இதெல்லாம் சேர்ந்து நயன்தாரா, வலைப்பேச்சு டீம் தொடர்பான இந்த விஷயத்தை இணையத்துல ஹாட் டாபிக்கா மாற்றியிருக்குது.












Click it and Unblock the Notifications