Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயே கூப்பிட்டாலும் நான் வரலன்னு திரிஷா சொல்ல வேண்டாமா? எனக்கு வந்த மிரட்டல் போன்! பார்த்திபன் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை திரிஷா இடையிலான வார்த்தை மோதல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திரிஷா குறித்து பார்த்திபன் கூறிய கருத்து தான் இந்த சர்ச்சைக்கு தொடக்கமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் திரிஷாவின் புகைப்படத்தை காட்டி அவரைப் பற்றி கருத்து கேட்கப்பட்டபோது அவர் அவருக்கே உரிய பாணியில் பதில் கொடுத்திருந்தார்.

அதாவது, "குந்தவை இந்த நேரத்தில் வீட்டில் குந்தவைக்கப்பட்டு இருந்தால் நல்லது" என்று அவர் கூறினார். திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் "குந்தவை" கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் அந்த பெயரை வைத்து பார்த்திபன் இப்படிப் பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பலரும் பார்த்திபனை கடுமையாக விமர்சித்தனர்.

Parthiban Trisha Krishnan Vijay

திரிஷாவின் பதிலடி

இதற்கு நடிகை திரிஷா தனது சமூக வலைதளத்தில் மறைமுகமாக பதிலடி கொடுத்தார். அவர் தனது பதிவில், "மைக்கில் பேசுவதாலே எல்லா வார்த்தைகளும் புத்திசாலித்தனமாக மாறிவிடாது. மரியாதையில்லாமல் பேசப்படும் வார்த்தைகள் யாரை நோக்கி சொல்கிறார்களோ அவர்களைப் பற்றி சொல்லாது; அதை பேசுபவரைப் பற்றிதான் சொல்லும்" என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவு நேரடியாக பார்த்திபனின் கருத்துக்கான பதிலாகவே பார்க்கப்பட்டது.

பார்த்திபன் வெளியிட்ட முதல் பதிவு

இந்த சர்ச்சை பெரிதாகிய நிலையில் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், "மணி ஆறாச்சி! வீடியோவை வெளியிடாம வேற என்ன ஆராய்ச்சி! கேள்வி நியாயம். சரியாக ஆறு மணியடிக்க அரைமணி நேரம் இருக்கும் போது ஒரு ரிங் டோன். எதிர் மூலையிலிருந்து ஒரு மூளை, 'உங்க ப்ரமோ பார்த்தேன். அந்த வீடியோவை வெளியிடாம இருக்கக் கூடாதா?' என்று கேட்டது.

இந்த கேள்வி எனக்கு அதிர்ச்சியை ஒரு பங்கும், ஆச்சரியத்தை மூன்று பங்கும் தந்தது. காரணம் கேட்டேன். 'ஏற்கனவே உங்க பக்கம் நல்ல விதமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இதோட விடலாம்' என்று சொன்னது. அதை விட வேண்டாம் என்று தோன்றியதால் ஒதுக்கி வைத்திருந்ததை கூட சேர்த்து வெளியிடுகிறேன். இன்னும் தெளிவாக விரைவில்..." என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு வெளியானதும் பார்த்திபனுக்கு போன் செய்து வீடியோவை வெளியிட வேண்டாம் என்று சொன்னது யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழ ஆரம்பித்தது.

இரண்டாவது வீடியோவில் பார்த்திபன் விளக்கம்

இதற்குப் பிறகு பார்த்திபன் இன்னொரு வீடியோவை வெளியிட்டு தனது கருத்தை விரிவாக விளக்கினார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கொஞ்சம் நேரம் இருந்தது. அந்த நேரத்தில் திரைப்பட விமர்சகர் அந்தணன் பேசிய வீடியோ பார்த்தேன். அதில், நடிகர் விஜய் தற்போது அரசியலில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவும் உருவாகி வருகிறது. இந்த நேரத்தில் அவருக்கு மைனஸ் ஆகக்கூடிய விஷயங்கள் நடக்கக் கூடாது என்பதுதான் பலரின் கவலையாக இருந்தது.

"ஒருவேளை விஜய் அந்த திருமணத்திற்கு அழைத்திருந்தால் கூட, திரிஷாவிற்கு 40 வயசு ஆகிவிட்டது அதற்குள்ள மெச்சூரிட்டியில், நீங்கள் நல்லபடியா போயிட்டு வாங்க என்று சொல்லி வீட்டிலேயே இருந்திருக்கலாம். அல்லது விஜயே அவருக்கு மேட்சிங்கா ஒரு சேலை வாங்கி கொடுத்திருந்தாலும் அதை அணிந்து வீட்டிலேயே இருந்து அனுப்பியிருக்கலாம்.

ஆனா நானும் வருகிறேன் என்று சொல்லி கிளம்பி வருவது விஜய்யின் அரசியல் வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதைத்தான் அந்த இடத்தில் சொல்ல வந்தேன்" என்று அவர் அந்த வீடியோவில் அந்தணன் கூறியுள்ளார்.

மேலும், "என்னிடம் பேசிய ஒரு பத்திரிகையாளர் கூட இதே மாதிரி கருத்தை சொன்னார். 'விஜய்க்கு இப்போது நல்ல பெயர் இருக்கிறது. அதை காப்பாற்ற வேண்டும்' என்றார். அதனால் தான் அந்த நேரத்தில் எனக்கு ஒரு ஆதங்கம் ஏற்பட்டது. அதனால்தான் நான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன்" என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினை

பார்த்திபன் இந்த விளக்கத்தை வெளியிட்ட பிறகும் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சிலர் பார்த்திபன் கூறியது தவறு இல்லை என்றும், அவர் விஜய்யின் அரசியல் பயணத்தை கருத்தில் கொண்டு தான் அந்த கருத்தை சொன்னார் என்றும் ஆதரவாக பேசுகின்றனர்.

மற்றொரு தரப்பு, ஒரு நடிகையை பற்றி பொது மேடையில் இப்படிப் பேசுவது சரியல்ல என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இன்னும் ஒரு கேள்வி

இதற்கிடையில் பார்த்திபனுக்கு போன் செய்து "வீடியோவை வெளியிட வேண்டாம்" என்று சொன்னது யார் என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படுகிறது. அந்த நபர் யார்? ஏன் அந்த வீடியோ வெளியிட வேண்டாம் என்று கேட்டார்? இந்த கேள்விகளுக்கு பதில் அடுத்ததாக வெளியிடப்படும் வீடியோவில் பார்த்திபன் கூறுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+