விஜய் சொல்லி கொடுத்து தான் ரஜினி பற்றி ஆதவ் பேசினாரு..! “அந்த” கதையை மறைக்க நடந்த சதி! பிரபலம் ஆதங்கம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா Aadhav Arjuna தெரிவித்த கருத்துகள் சமீப நாட்களாக பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அந்த பேச்சுக்கு அரசியல் வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல விமர்சகர் தேனி கண்ணன் வெளியிட்டுள்ள கருத்துகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றபோது திமுக தரப்பில் இருந்து மிரட்டல் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் அரசியலுக்கு வர முடியாமல் போய்விட்டதாகவும் கூறியிருந்தார்.
மேலும் தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவன தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த பேச்சு வெளியானதும் ரஜினி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். "ரஜினிகாந்த் எந்த மிரட்டலுக்கும் அஞ்சுபவர் அல்ல" என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்து வருகின்றனர்.
மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்
இந்த விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும்போது மதுரையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மதுரை மாநகர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நலச்சங்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில், "காக்கா குஞ்சுகளுக்கும் கள்ள சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் தலைவா... வேதனை, வெட்கம், அவமானம்... காலம் பேசாது, நிச்சயம் பதில் சொல்லும்... களத்தில் சந்திப்போம்... கதம் கதம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தேனி கண்ணன் கூறிய புதிய குற்றச்சாட்டு
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய தேனி கண்ணன், ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு பின்னால் நடிகர் விஜய் இருக்கிறார் என்று குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது: "ஆதவ் அர்ஜுனா தன்னாலேயே இப்படிப் பேசவில்லை. இதற்குப் பின்னால் விஜய் இருக்கிறார். விஜய் சொல்லி கொடுத்ததால்தான் ஆதவ் இப்படி ரஜினியை பற்றி பேசியிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
ஏன் ரஜினி பெயரை எடுத்தார்?
மேலும் அவர் பேசும்போது, சமீப காலமாக விஜயை சுற்றி பல சர்ச்சைகள் பேசப்பட்டு வருவதாகவும் கூறினார். குறிப்பாக அவரது குடும்ப வாழ்க்கை குறித்து வெளிவரும் விவாகரத்து குறித்த தகவல்கள் மற்றும் நடிகை திரிஷா தொடர்பான வதந்திகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலைமையில் அந்த கவனத்தை மாற்றுவதற்காகவே ரஜினிகாந்த் பெயரை எடுத்துக் கொண்டு பேச சொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ரசிகர்கள் கவனம் திருப்ப முயற்சி?
தேனி கண்ணன் மேலும் கூறும்போது, "ரஜினியை பற்றி பேசினால் கண்டிப்பாக ரசிகர்கள் கோபப்படுவார்கள். அதனால் சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் உருவாகும். அப்போ மக்கள் எல்லாம் அதைப் பற்றித்தான் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அப்போது மற்ற சர்ச்சைகள் மறந்து போய்விடும் என்று நினைத்துதான் இந்த விஷயம் நடந்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து சூடுபிடிக்கும் விவகாரம்
ஏற்கனவே ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு காரணமாக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் விவாதம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது தேனி கண்ணன் கூறிய இந்த குற்றச்சாட்டு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ரஜினி - விஜய் - தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான இந்த விவகாரம் இன்னும் சில நாட்கள் சமூக வலைதளங்களில் பேசப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்!









Click it and Unblock the Notifications